குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

மழைக்காலத்தின் போது நம்முடைய உடலை ஆரோக்கியமாக பராமரிக்க சில வகையான உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை நமது குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
image
image

மழைக்காலத்தின் போது நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, குடலின் செயல்பாட்டை பாதிக்கும் வகையிலான பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். ஆரோக்கியமான குடல் இயக்கம் என்பது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சிறந்த மனநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

எனினும், மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது பெரிய சவாலான காரியம் அல்ல. சில வகையான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.

பாதாம்:

பாதாம் என்பது சாதாரண சிற்றுண்டி மட்டும் கிடையாது. அது ஒரு ஆற்றல் மிகுந்த ப்ரீபயாடிக் ஆகும். மேலும், லக்டோபேசில்லஸ் மற்றும் பிஃபிடோபேக்டீரியம் போன்ற நன்மை தரும் பேக்டீரியாக்களின் வளர்ச்சியை பாதாம் ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. குடலின் உட்புற அடுக்குகளையும் இது வலுப்படுத்துகிறது. குறிப்பாக, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, இருதய ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் ஆற்றல் பாதாமில் உள்ளது. எனவே, தினசரி உணவில் பாதாமை ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ளலாம்.

Almond

பழங்களின் முக்கியத்துவம்:

மழைக்காலத்தில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. இவை செரிமானத்திற்கு மிகவும் உதவுகின்றன. பப்பாளி, பேரிக்காய் மற்றும் மாதுளை ஆகியவை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. பருவ கால பழங்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. இது ஈரப்பதமான காலநிலையில் ஏற்படும் பொதுவான நோய்த் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்

பருப்பு சூப் அருந்துவதன் அவசியம்:

ஒரு சூடான பருப்பு சூப் மழைக்கால மாலையில் இதமளிப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமையும். மேலும், இது குடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், ஃபோலேட் போன்ற சத்துகளையும் கொண்டுள்ளது. இதனால் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக பருப்பு அமைகிறது.

Lentil soup

தயிர்:

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் அல்லது மோர் மழைக்கால உணவில் அவசியம் இடம்பெற வேண்டிய ஒன்று. புரோபயாடிக் (probiotic) நிறைந்த தயிர், செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையையும் பராமரிக்கிறது. மேலும், இது புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி-யையும் வழங்குகிறது. தயிரை சாதம் அல்லது கிச்சடியுடன் சேர்த்து சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வயிற்றுக்கும் இதமளிக்கும்.

இந்த எளிய உணவுகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மழைக்காலத்தில் வரும் நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP