herzindagi
image

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றவும்

இரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் எவ்வாறு குறைக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் காணலாம். ஆனால், இவற்றை உங்களுடைய வழக்கமான மருந்துகளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது.
Editorial
Updated:- 2025-11-01, 14:33 IST

உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், இதயம், ரத்த நாளங்கள், நரம்பு பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் கண் பாதிப்புகள் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்

 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.

 

சர்க்கரை பானங்களை தவிர்த்தல்:

 

அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், சர்க்கரை கலந்த பானங்கள், வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை அரிசியை தவிர்த்து விடலாம். குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும் நபர்களுக்கு கிளைசெமிக் கட்டுப்பாடு, உடல் எடை குறைப்பு மற்றும் இன்சுலின் பயன்பாடு மேம்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Blood sugar

 

இலவங்கப்பட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:

 

தினசரி உணவு முறையில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி இலவங்கப்பட்டையை உங்கள் காலை தேநீருடன் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரையின் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

நார்ச்சத்து நிறைந்த சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

 

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, உணவை தொடங்குவதற்கு முன்பு நார்ச்சத்து நிறைந்த சாலட்டை சாப்பிடலாம். இதன் மூலம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதுடன் செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும்.

Sugar

 

சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி:

 

ஒவ்வொரு முறை உணவு எடுத்துக் கொண்ட பிறகும், 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாகும். இந்த நடைபயிற்சி உணவுக்கு பிந்தைய குளுக்கோஸ் அதிகரிப்பை இயற்கையாக குறைத்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

 

பாகற்காய் சாறு அருந்துதல்:

 

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள், வாரத்திற்கு மூன்று முறை பாகற்காய் சாறு அருந்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த எளிமையான முறையை பின்பற்றுவதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன்பாக உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சில சூழல்களில் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com