herzindagi
image

மழைக்காலம் வந்தாச்சு; கட்டாயம் இதெல்லாம் செய்ய மறந்திடாதீங்க!

மழைக்காலத்தில் எவ்வித உடல் நல பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-10-31, 22:41 IST


தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. வழக்கத்திற்கு மாற்றாக இந்தாண்டு அதீத மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றார் போல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் தொற்று பாதிப்பால் சந்தித்து வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், மழைக்காலம் தொடங்கியதும் கட்டாயம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.

மேலும் படிக்க: கேரட் ஜூஸ் ஒன்று போதும்; இத்தனை நன்மைகளை எளிதில் பெற்றுவிட முடியும்!

மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • மழைக்காலம் வந்தாலே குளிர்ந்த காலநிலை பலருக்கும் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை மழைக்காலம் முடியும் வரைக்கும் தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
  • தண்ணீரை நீண்ட நாள்களுக்கு பானை அல்லது அண்டாவில் சேகரித்து வைப்பதைத் தவிர்க்கவும். சுத்தமான நீரில் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது.
  • டெங்கு, மலேசியா போன்ற பாதிப்புகள் கொசுக்களினால் ஏற்படும் என்பதால், மழைக்காலங்களில் வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஒருவேளை தேங்கியிருந்தாலும் உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் இயற்கை பானங்கள்; காலை நேரத்தில் அருந்தினால் கூடுதல் பலன்

  • குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவி விடவும். இதனால் கொசுக்கள் அதிகளவில் கடிக்காமல் இருக்கும். அதே வேளையில் வைரஸ் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
  • தினமும் சூடான டீ அருந்துவதற்குப் பதிலாக சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற மூலிகை கலந்த பானங்களை அருந்தவும்.
  • மழைக்காலங்களில் தூங்குவதற்கு அன்றாடம் பயன்படுத்தும் தலையணை, பெட்ஷீட் போன்றவற்றை கொஞ்சம் வெயில் அடிக்கும் நேரத்தில் உலர்த்திக் கொள்வது நல்லது.
  • வீட்டில் உள்ள குழந்தைகளை மழைநீரில் விளையாடுவதைத் தவிர்க்க சொல்லவும்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் துளசி தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்

  • நாம் சாப்பிடக்கூடிய உணவில் புளித்த நீர், புளித்த மோர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • மழைக்காலத்தில் அதிகம் கடைகளில் எண்ணெய் பலகாரங்கள் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கலப்படமான எண்ணெய்கள் இருப்பதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com