herzindagi
indian women image ()

40 வயது பெண்களின் பலவீனம் மற்றும் மனநிலை மாற்றங்களை போக்க சிறந்த பானம்

40 வயதிற்குப் பிறகு பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் பலவீனம், சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன
Editorial
Updated:- 2024-07-10, 16:49 IST

பெண்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். மாதவிடாய் தொடங்குவதற்கும் முடிவதற்கும் முன்பு உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. சில ஹார்மோன்களின் அளவு குறைகிறது, சில உயர்கிறது. ஹார்மோன்களின் இந்த மாற்றங்கள் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் நிறுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.  பெரி-மெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்கள் மனநிலை மாற்றங்கள், பதட்டம், பலவீனமாக உணர்தல், இரவில் வியர்த்தல் மற்றும் வெப்பம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். உங்கள் வீட்டிலும் 40 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால். இந்த அறிகுறிகள் உடலில் தோன்ற ஆரம்பித்திருந்தால், நிபுணர் பரிந்துரைத்த இந்த சிறப்பு பானத்தை உணவின் ஒரு பகுதியாக சேர்க்கலாம். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீ அளித்த தகவலை பார்க்கலாம். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க: சர்க்கரை நோயை அதி வேகமாக குறைக்கும் தன்மை தாமரை தண்டுக்கு உண்டு

மாதவிடாய் காலத்தில் இந்த ஆரோக்கியமான பானத்தை குடிக்க வேண்டும்

fennel seed inside

லிக்னின் ஆளி விதைகளில் காணப்படுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சமன் செய்கிறது.

மாதவிடாய் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு மாறுகிறது. இது உடலின் பல செயல்பாடுகளை பாதிக்கிறது.

பெருஞ்சீரகம் விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளதால் சூடான ஃப்ளாஷ், மனநிலை மாற்றங்கள் மற்றும் இரவு வியர்வை ஆகியவற்றைக் குறைக்கிறது.

சாஸ்ட்பெர்ரி தேநீர் புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறைக்கிறது. இதனால் சூடான ஃப்ளாஷ்களைக் குறைக்கிறது.

இது ஈஸ்ட்ரோஜன் அளவை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கிறது.

தேவையான பொருள்கள்

lotus stem new inside ()

பெருஞ்சீரகம் விதைகள் - 5 தேக்கரண்டி

ஆளி விதைகள் - 5 தேக்கரண்டி

தண்ணீர் - 200 மி.லி.

சாஸ்ட்பெர்ரி தேநீர் - 1 தேநீர் பை

செய்முறை

ஒரு கடாயை எடுத்து அதில் இரண்டு விதைகளையும் போட வேண்டும்.

அதை 5 நிமிடங்கள் வறுக்கவும்.

இரண்டு விதைகளையும் ஒரு பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

இப்போது ஒரு ஸ்பூன் இந்த பொடியை 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் 1 டீ பேக் சேர்க்கவும்.

உங்கள் ஆரோக்கியமான பானம் தயாராக உள்ளது.

மேலும் படிக்க: காது வலிக்கு நிவாரணம் தரும் அருமையான வீட்டு வைத்தியம்

இந்த அறிகுறிகள் பெரி-மெனோபாஸ் காரணமாக 40 க்குப் பிறகு காணப்படுகின்றன. நிபுணர்கள் பரிந்துரைக்கும் பானம் அவற்றைக் குறைக்க உதவும். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com