
இன்றைய சூழலில் உடல் ரீதியாக எத்தனையோ பிரச்சனைகளை மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். அதில் வாய் துர்நாற்றமும் அடங்கும். இதனை சரி செய்யக் கூடிய குறிப்புகளை இந்தக் கட்டுரையில் ஆராயலாம்.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்
வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இது நம் தன்னம்பிக்கையை பாதிப்பதோடு மற்றவர்களுடன் பேசுவதற்கும் தயக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாய் துர்நாற்றத்தை நீக்க, நம் சமையலறையிலேயே இருக்கும் சில இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம்.
கிராம்பில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைத்து, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், இரத்தக் கசிவு மற்றும் பல் சிதைவு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை உடனடியாக போக்கலாம்.

ஒரு நாளில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போதும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். தண்ணீர், வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. எனவே, வாய் துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்தால், நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். நீங்கள் குடிக்கும் தண்ணீரில் பாதி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து குடிப்பது வாய்க்கு மேலும் புத்துணர்ச்சி அளிக்கும்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டிற்கும் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை வாயில் பாக்டீரியாக்கள் வளர்வதை குறைத்து, ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூளை கலந்து பற்கள் மற்றும் ஈறுகளில் தடவுவதன் மூலம், வாய் துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு இரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க: Health tips for women: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்களா நீங்கள்? அப்போ இந்த ஹெல்த் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
இலவங்கப்பட்டையின் இனிப்பு சுவை கொண்ட பட்டை வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும். கிராம்பைப் போலவே, இலவங்கப்பட்டையிலும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இலவங்கப்பட்டையின் ஒரு சிறிய துண்டை வாயில் போட்டு சில நிமிடங்கள் வைத்திருப்பதன் மூலம் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்பளிப்பது வாயில் கெட்ட பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கிறது. உப்பு நீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் முதல் அரை தேக்கரண்டி உப்பு கலந்து, வெளியே செல்வதற்கு முன் அதைக் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்ல பலன் தரும்.
இந்த எளிய, இயற்கையான முறைகளை பின்பற்றி வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com