herzindagi
image

உதடுகள் கருமையாக இருக்கிறதா? கவலையே வேண்டாம், இந்த 5 டிப்ஸை பின்பற்றுங்கள்

சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும். இதற்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு, அதிகமாக காபி அருந்துதல் மற்றும் தரமற்ற மேக்கப் சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இதனை எவ்வாறு சீரமைக்கலாம் என்று பலரும் நினைப்பார்கள்.
Editorial
Updated:- 2025-10-11, 15:16 IST

அதன்படி, இயற்கையான முறையில் கருமையான உதடுகளை எவ்வாறு இயல்பான நிறத்திற்கு மாற்றலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது பலருக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்கு வீட்டில் இருக்கக் கூடிய சில எளிய பொருட்களை பயன்படுத்தினால் போதும்.

மேலும் படிக்க: Hair care tips: தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயம்; சாறு எடுத்து இப்படி யூஸ் பண்ணுங்க

 

எலுமிச்சை மற்றும் தேன்:

 

இயற்கையாக நிறத்தை மாற்றும் குணம் எலுமிச்சையில் இருக்கிறது. தேன் உதடுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து, வறண்டு போகாமல் பாதுகாக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யவும், சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உதடுகளை பாதுகாக்கவும் உதவுகின்றன. இதற்காக ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன், அரை தேக்கரண்டி தேன் கலந்து, இரவு தூங்குவதற்கு முன் உதடுகளில் தடவவும். இதனை, காலையில் குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இது நல்ல பலன்களை கொடுக்கும்.

Lip treatment

 

ரோஜா இதழ் மற்றும் பால்:

 

ரோஜா இதழ்கள் இயற்கையாகவே உதடுகளுக்கு ரோஸ் நிறத்தை அளிக்கும். பால், உதடுகளின் நிறமியை குறைத்து கருமையை போக்க உதவும். அதன்படி, ரோஜா இதழ்களை பாலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின்னர், இவற்றை பசை பதத்திற்கு அரைத்து, அதை உதட்டில் தடவ வேண்டும். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இப்படி வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை பின்பற்றலாம்.

மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி; இனி முருங்கை பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க மக்களே

 

பீட்ரூட் சாறு:

 

பீட்ரூட் ஒரு அற்புதமான இயற்கை அழகு பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதடுகளுக்கு ஊட்டமளித்து, கருமையை நீக்கி படிப்படியாக இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கும். பீட்ரூட் சாறை தினமும் இரவு தூங்குவதற்கு முன் உதடுகளில் தடவவும். காலையில் இதை கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Lip home remedies

 

கற்றாழை ஜெல்:

 

கற்றாழையில் உள்ள அலோயின் (aloin) என்னும் இயற்கையான கலவை, கருமையை போக்க உதவுகிறது. இதன் ஈரப்பதம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். சிறு கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடலாம். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் உதடுகள் இயற்கையான நிறத்திற்கு மாறும்.

 

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்:

 

உதடுகளில் உள்ள டெட் செல்களை நீக்குவதன் மூலம் அதில் இருக்கும் கருமையை மறைக்க முடியும். ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஃபேட்டி ஆசிட்கள் உதடுகளுக்கு ஆழமான ஊட்டத்தை அளித்து வறண்டு போகாமல் பாதுகாக்கும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன், அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, உதடுகளில் 1-2 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com