herzindagi
image

பெண்களின் தொப்பையைக் குறைக்க உதவும் சிறந்த கார்டியோ பயிற்சிகள் இவை தான்!

ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி எதுவும் மேற்கொள்ள முடியாத நபர்கள் வீட்டிலேயே மிகவும் சுலபமாக சில கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு வயிற்றுத் தொப்பைக் குறைக்க முடியும்.
Editorial
Updated:- 2025-11-05, 23:44 IST

இன்றைக்கு உள்ள பிஸியான வாழ்க்கை முறையில் அனைவராலும் நினைத்த வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய முடியாது. குறிப்பாக பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் என யாராக இருந்தாலும் அவர்களின் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்வது என்பது முடியாத காரியம். என்ன தான் திருமணத்திற்கு முன்னதாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும், குழந்தைப் பிறந்த பின்னதாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் எடை கணிசமாக அதிகரித்துவிடுகிறது. குறிப்பாக அதிகம் தொப்பைப் போடும் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால், ஜிம்மிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க: ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

தொப்பையைக் குறைக்க உதவும் கார்டியோ பயிற்சிகள்:


படிக்கட்டு ஏறுதல்:

வயிற்றில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதற்கு நேரம் கிடைக்கும் போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நல்லது. காலையில் அல்லது மாலை நேரத்தில் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ? அப்போதெல்லாம் படிக்கட்டில் ஏறி இறங்குவது நல்லது. இதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லையென்றால் துணி காய வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளை மாடியில் ஏறி செய்வது நல்லது.

சைக்கிள் ஓட்டுதல்:

கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாக உள்ளது சைக்கிள் ஓட்டுதல். அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சைக்கிளைப் பயன்படுத்துங்கள். கால்களால் அழுத்தி கொஞ்ச தூரத்திற்கு செல்லும் போது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

நடந்து செல்லுதல்:

நடைப்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியில் சென்றாலும் வழக்கத்தை விட கொஞ்சம் வேகமாக நடந்து செல்லவும். முடிந்தவரை வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் பணி நிமிர்த்தமாக வங்கிகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் நடந்து செல்வது நல்லது. இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.

நீச்சல்:

கார்டியோ பயிற்சிகளில் மிகவும் முக்கியமானது நீச்சல். வாரத்திற்கு ஒருமுறையாவது நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் தசைகளை வலுப்படுத்தி வயிற்றுக் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க: உடல் எடை குறைப்பு முதல் இருதய ஆரோக்கியம் வரை; நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங்:

காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கிப்பிங் செய்யவும். இவ்வாறு செய்யும் போது எலும்புகள் மற்றும் கால்களை வலுப்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கிறது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com