herzindagi
image

குதிகாலில் ஏற்படும் பித்தவெடிப்புகளைச் சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம் இதோ!

உடல் பருமன், உடலின் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் குதிகாலில் பித்த வெடிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.
Editorial
Updated:- 2025-09-11, 22:48 IST

பெண்கள் என்றாலே எப்போதும் தனி அழகு தான். அவர்கள் அணியும் ஆடைகள் முதல் விதவிதமாக போடும் ஹேர்ஸ்டைல்கள் வரை அனைத்தையிலும் ஓர் அழகு உண்டு. இது மட்டுமல்ல கால்களில் அணியும் கொலுசும் அதன் சத்தமும் கூட பெண்களை எப்போதும் ஒரு படி அழகாகக் காட்டும். ஆனால் என்ன பல நேரங்களில் கொலுசுகள் போடும் போது குதிகாலில் உள்ள பித்தவெடிப்பு அவற்றின் அழகைக் குறைத்துவிடும். என்ன காரணம்? வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி பித்தவெடிப்புகளைச் சரி செய்ய முடியும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய தண்ணீர்; நோட் பண்ணுங்க மக்களே

பித்த வெடிப்பு ஏற்படக் காரணங்கள்:

நம்முடைய உடலில் உள்ள ஒட்டு மொத்த எடையையும் தாங்கி நிற்பது பாதங்கள் தான். இவற்றில் ஏற்படக்கூடிய பித்த வெடிப்பிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக தோலின் உள் அடுக்கில் எண்ணெய் பதம் குறைவது, உடலின் நீர்ச்சத்துக்கள் குறைவது, உடலில் அதிக சூடு ஏற்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் சருமம் அதிக வறட்சி அடைவதால் குதிகாலில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது.  உடல் பருமன் அதிகமானாலும் பலருக்கு குதிகாலில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது. 


பித்தவெடிப்பிற்கான வீட்டு வைத்தியம்:

  • பித்தவெடிப்பை சரிசெய்வதற்கு மருந்தகங்களில் விற்பனையாகும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதற்கு முன்னதாக வீட்டிலேயே எளிய முறையில் குணப்படுத்த முயற்சி செய்யலாம்.
  • முதலில் குதிகாலில் ஏற்படும் பித்த வெடிப்புகளைச் சரிசெய்ய வேண்டும் என்றால் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் வெதுவெதுப்பான நீரின் உள்ளே 5 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். கொஞ்சமாக உப்பு சேர்க்கும் போது காலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு பாதிப்பு குணமடையும்.
  • குதிகாலில் ஏற்படும் பித்த வெடிப்புகளைச் சரி செய்யவதற்கு மாமர பிசினை உபயோகிக்கலாம். தண்ணீரை நனைத்து களிம்பு போன்று தயார் செய்து பாதிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வரும் போது குணமாகும்.

மேலும் படிக்க: தினமும் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுங்க; உடல் வலிமைப் பெறுவதோடு ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கலாம்!


  • பித்தவெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் கற்றாழை அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யைக் கலந்து பாதிப்பு உள்ள இடங்களில் அப்ளை செய்யலாம்.
  • மாதத்திற்கு ஒருமுறை மருதோன்றி இலை எனப்படும் மருதாணி இலைகளுடன் மஞ்சள் வைத்து பாதிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்தவெடிப்பு குணமாகும்.
  • எலுமிச்சை சாறை சூடான தண்ணீரில் கலந்து 15 நிமிடங்கள் கால்களை வைக்கவும். பின்னர் பாதங்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கான உள்ள பிரெஸ்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
  • சருமம் வறண்டு விடுவதாலும் பித்தவெடிப்பு பாதிப்பு ஏற்படும் என்பதால் அடிக்கடி ஏதாவது எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யவும்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com