herzindagi
drumstrick big image

Drumstick Soup: வேகமாக உடல் எடையை குறைக்க விரும்பினால் முருங்கைக்காய் சூப் குடியுங்கள்!!

முருங்கைக்காய் சூப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகளைப் பெறுவீர்கள். 
Editorial
Updated:- 2024-04-23, 21:16 IST

முருங்கை இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் மற்றும் முருங்கைக்காய் அனைத்தும் நன்மை பயக்கும். இதனை சூப் செய்து குடிப்பதால் உடல் எடை குறைகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் உடலுக்கு பல சிறந்த பலன்களை வழங்குகிறது.

முருங்கைக்காய் சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை சூப் செய்து குடிப்பதால் உடல் எடை குறைகிறது. முருங்கைக்காய் சூப்பை தினமும் கூட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதைச் செய்வதற்கான சரியான வழியையும் அதன் பலன்களையும் நிபுணர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டோம். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்து வருகிறார். மன்பிரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க:  காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள் பற்றி தெரியுமா?

முருங்கைக்காய் சூப்பின் நன்மைகள் 

drumstrick inside

  • பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் முருங்கையில் காணப்படுகின்றன.
  • இதில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
  • முருங்கை, தக்காளி மற்றும் வெண்டைக்காயில் இதுபோன்ற பல கூறுகள் காணப்படுகின்றன, இது புற்றுநோயைத் தடுக்கிறது.
  • இந்த சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கி கல்லீரலுக்கு நன்மை பயக்கும்.
  • இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்றுப் புழுக்களை நீக்குகிறது.
  • கீல்வாத நோயாளிகளுக்கு இந்த சூப் பயனுள்ளதாக இருக்கும்.
  • உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த சூப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும், பிபியைக் கட்டுப்படுத்துவதிலும் இது சிறந்த சூப்பாக இருக்கிறது.
  • இது மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்துகிறது.
  • ஆரோக்கியமாக இருக்க முருங்கை சூப்பை தினமும் குடிக்கவும் 

தேவையான பொருள்

  • முருங்கைக்காய் - 100 கிராம்
  • தக்காளி - 50 கிராம்
  • பருப்பு - 30 கிராம்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • கிராம்பு - 1
  • பிரிஞ்சி இலை - 1
  • இஞ்சி - அரை அங்குலம்
  • மஞ்சள் - அரை அங்குலம்
  • கல் உப்பு - 1 சிட்டிகை
  • கருப்பு மிளகு - 1 சிட்டிகை
  • கொத்தமல்லி தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

drumstrick soup

  • துவரம்பருப்பு, தோல் நீக்கிய முருங்கைக்காய் மற்றும் தக்காளியை தண்ணீரில் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் காத்திருக்கவும்.
  • அதன்பிறகு அவற்றை நன்றாக மசித்து வடிகட்டவும்.
  • ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் மஞ்சள், இஞ்சி, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
  • அவற்றை அனைத்தையும் நன்றாக வதக்கி விட வேண்டும்.

மேலும் படிக்க: பிபி மற்றும் கொலஸ்ட்ராலை காட்டுப்படுத்தும் தன்மை புளிக்கு இருப்பது தெரியுமா?

  • அதன்பின் மசித்த சூப்பை நெய்யால் தாளித்த பொருட்களில் சேர்க்க வேண்டும். பிறகு  கொத்தமல்லி, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும்.
  • அதன்பிறகு ஆரோக்கியமான சூப் தயார். தினமும் இந்த சூப்பை கூடித்து வந்தால் உடல் எடை குறையும். 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com