Belly Fat Reduce: தொள தொள வென தொங்கும் தொப்பையை ஃபிட்டாக வைத்திருக்க மசாலா தண்ணீர்

சமையலறையில் இருக்கும் பல மசாலாப் பொருட்கள் தொப்பையைக் குறைக்கும்.  இந்த இரண்டு மசாலாப் பொருட்களையும் தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் எளிதாகக் குறைக்கலாம்.

belly fat reduce image big

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பல காரணங்களால் தொப்பை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சரியான காரணத்தை அறிந்த பிறகு தொப்பையை குறைக்க முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சமையலறையில் வைக்கப்படும் பல மசாலாப் பொருட்கள் தொப்பையைக் குறைக்கும். இது தவிர சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் முக்கியம். நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த இரண்டு மசாலாப் பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் பிடிவாதமான தொப்பையை எளிதாகக் குறைக்கலாம். மன்பிரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர். அவரிடன் இருந்து தெரிந்துக்கொள்வோம்.

தொப்பையை குறைக்க மஞ்சள் தண்ணீர் குடியுங்கள்

turmeric new inside

  • மஞ்சள் நீர் தொப்பையை குறைக்க உதவும்.
  • வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிப்பதால் உடலில் சேரும் நச்சுக்கள் வெளியேறும்.
  • மஞ்சள் ஒரு சூடான விளைவைக் கொண்டுள்ளதால் கோடைக்காலத்தில் இதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
  • மஞ்சளில் குர்குமின் உள்ளதால் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்பு திசுக்களை குறைக்க உதவுகிறது.
  • இதற்கு பச்சை மஞ்சளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பச்சை மஞ்சளை ஒரு சிறு கட்டியை தண்ணீரில் போட்டு பாதி இருக்கும் வரை கொதிக்க வைக்கவும்.
  • பாதியாகக் குறைந்ததும் வடிகட்டி அதில் ஒரு சிட்டிகை கருப்பட்டி மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
  • எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு மிளகு கூட கொழுப்பை எரிக்க உதவுகிறது.
  • இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • தினமும் குடிக்கக் கூடிக்க வேண்டாம். இந்த பானத்தை வாரத்திற்கு 3 முறை குடிக்கவும்.

இலவங்கப்பட்டை தண்ணீர் தொப்பையை குறைக்க உதவும்

Cinnamon new inside

  • தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பிடிவாதமான வயிற்றில் உள்ள கொழுப்பு எளிதில் குறைக்கலாம்.
  • இலவங்கப்பட்டை வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
  • பிடிவாதமான தொப்பை கொழுப்புக்கு இன்சுலின் எதிர்ப்பு ஒரு முக்கிய காரணமாகும்.
  • இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் அங்குல துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
  • பாதி இருக்கும் வரை கொதிக்க வைக்கவும்.
  • இதை தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
  • இது தொப்பையை குறைக்க உதவும்.
  • இது ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்கிறது.

மேலும் படிக்க: மா இலையில் மறைந்து இருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?


இந்த 2 மசாலாப் பொருட்களைக் குடிப்பதால் தொப்பையைக் குறைக்கலாம். உங்களுக்கு ஏதேனும் உடல்நலம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP