herzindagi
mango leaf image big

Mango Leaf Benefits: மா இலையில் மறைந்து இருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

மாம்பழத்தின் தனித்துவமான இனிப்பு சுவை மற்றும்  இதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக அறியப்பட்டாலும். அதன் இலைகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-06-17, 19:01 IST

மாம்பழத்திற்காக கோடை நாட்களை எதிர்ப்பார்த்து அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அனைத்து வயதினரும் இந்த பழத்தை ஔவௌயை அனுபவிக்கிறார்கள். மாம்பழம் அதன் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் சுவைக்காக அறியப்பட்டாலும் அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்காக சமமாக மதிப்பிடப்படுகின்றன. மா இலைகள் உணவுக்காகவும் மருந்துக்காகவும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  கிளாசிக்கல் ஹத யோகா ஆசிரியரும் வாழ்க்கை முறை நிபுணருமான திருமதி ஷ்லோகா ஜோஷி இதன் நன்மைகள் பற்றி கூறியுள்ளார். 

ஆரோக்கிய நன்மைகளுக்காக மா இலையை பயன்படுத்தும் முறை  

  • மா இலையிலிருந்து சாறு எடுத்து தினமும் 20 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
  • 10-12 புதிய மென்மையான மா இலைகளை 150 மில்லி தண்ணீரில் காய்ச்சி, உணவுக்கு முன் தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கவும். இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும். கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

diabetic new inside

  • பூஞ்சை தொற்று, காயம் குணப்படுத்துதல் மற்றும் சரும அழற்சிக்கு 20-25 மா இலைகளை எரித்து அதன் சாம்பலை சேகரித்து கொள்ளுங்கள். சாம்பலை சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 
  • புதிய மா இலைகளை ஒரு பேஸ்ட் போல் செய்து, அதை உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவவும். இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
  • 1-2 டீஸ்பூன் மாம்பழம் இலை காயவைத்து பொடியை செய்து எடுத்துக்கொள்ளுங்கள். அதனை 150 மில்லி தண்ணீரில் ஊற்றி இரவு முழுவதும் விடவும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள கற்களை வெளியேற்ற உதவும். இதை 21 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும், அதற்கு மேல் வேண்டாம். முடிவுகளை அறிந்துக்கொள்ள ஸ்கேன் செய்து பாருங்கள்.

urinary problem inside

  • விக்கல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெற மா இலைகளை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிக்கவும்.
  • 10 புதிய மென்மையான மா இலைகள் மற்றும் 2-3 மிளகுத்தூள் ஆகியவற்றை பேஸ்ட் உருவாக்கி. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு நிவாரணம் பெற இந்த பேஸ்ட்டை உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com