துளசி அதன் ஆரோக்கிய நன்மைகளால் நம்மை வியப்பில் ஆழ்த்துவதை நிறுத்துவதே இல்லை. ஆனால் துளசி உங்கள் மாதவிடாய் சுழற்சியை கூட சீராக்க உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மருத்துவ தாவரமாக கூறப்படும் துளசி இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் பல பண்புகளை கொண்டுள்ளது. உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் துளசி தீர்வைப் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
இதுவும் உதவலாம் :கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரு தீவிர நோயின் அறிகுறியா !
ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட காரணங்கள் என்ன?
- தைராய்டு கோளாறுகள் அல்லது பிசிஓடி போன்ற ஹார்மோன் பிரச்சனைகள்
- அதிக எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு
- மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற உணர்வு தொடர்பான பிரச்சினைகள்
- பசியின்மை மற்றும் புலிமியா போன்ற உணவுக் கோளாறுகள்
- கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளுதல்
- அதிகப்படியான பயணம்
- அதிக உடற்பயிற்சி
- தாய்ப்பால் பருவம்
துளசி எவ்வாறு உதவுகிறது?
துளசி ஒரு சக்திவாய்ந்த அடாப்டோஜென் ஆகும், அதாவது இது மன அழுத்தத்தை குறைக்கும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தும். இது மட்டுமின்றி, ஒரு இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும், மேலும் இது ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மைகள் கொண்டது. துளசி கார்டிசோல் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதால், மாதவிடாயை சரியான முறையில் ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படுகிறது. 10 கிராம் துளசி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் தவறாமல் குடிக்க வேண்டும் என்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேடிவ் மெடிசின் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அமர்ஜித் சிங் ஜஸ்ஸி பரிந்துரைக்கிறார்.
இந்த பிரச்சினை இருந்தால் துளசியை உட்கொள்ள வேண்டாம்
துளசி உடலின் ஹார்மோன்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படவில்லை. நீங்கள் ஏற்கனவே அசெட்டமினோஃபென் கொண்ட சில வகையான வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டால், இது இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளால் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் உங்கள் கல்லீரலையும் பாதிக்கலாம்.
இதுவும் உதவலாம் :ஹார்மோன் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்
Leucorrhoea (லுகோரோயா) மற்றும் Amenorrhoea (அமினோரியா)சிகிச்சை
உங்கள் மாதவிடாய் காலங்களில் துளசி செடியைத் தொடக்கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இது ஒரு முழுமையான கட்டுக்கதை. உண்மையில், துளசி லுகோரியா (அசாதாரண யோனி வெளியேற்றம்) மற்றும் அமினோரியா (மாதவிடாய் வராமல் இருப்பது) போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். நீங்கள் 20 மில்லி துளசி சாற்றை அரிசி நீரில் கலந்து சாப்பிட முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம், இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெறலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation