herzindagi
image

முகம் மற்றும் கூந்தல் பொலிவிற்கான ரகசியம் ஏபிசி ஐஸ் க்யூப்கள் தான் ; எப்படி தெரியுமா?

பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க ஏபிசி ஜுஸ்களின் மூலம் தயாரிக்கும் க்யூப்கள் சிறந்த தேர்வாக அமையும்.  
Editorial
Updated:- 2025-09-14, 21:00 IST

பெண்கள் எப்படி தங்களது முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்ற இணையதளத்தில் தேட ஆரம்பித்தால், முதலில் வந்து நிற்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏபிசி ஜுஸ்கள். இந்த மூன்று பொருட்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் எப்போதும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக அதிசய பானமாக உள்ளது. இன்றைக்கு உள்ள அவசர கதியில் தினமும் ஆப்பிள், பீட்ருட், கேரட்டை வைத்து ஜூஸ்கள் செய்து பருக முடியும் என்றால் நிச்சயம் கேள்விக்குறி தான். இதற்கு தீர்வு என்ன? எப்படி பெண்கள் தங்களது கூந்தலையும் சருமத்தையும் பொலிவுடன் வைத்திருக்க முடியும்? என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: 20 வயது முதல் 40 வயது வரை ஏற்படும் முக சுருக்கங்கள், வயதான தோற்றத்தைத் தவிர்க்க உதவும் வைத்தியங்கள்

பெண்களுக்குப் பேருதவியாக அமையும் ஏபிசி க்யூப்கள்:

சரும பொலிவைப் பெறுவதற்கு தயாரிக்கப்படும் ஏபிசி க்யூப்களை செய்வதற்கு முதலில் நல்ல கேரட், பீட்ரூட், ஆப்பிள் போன்றவற்றைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். இதோடு சில பொருட்களையும் உடன் சேர்க்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் - 1
  • பீட்ரூட்- 1
  • கேரட் - 1
  • மாதுரை - கால் கப்
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு
  • தேன் - 2 டீஸ்பூன்
  •  அகர் அகர் பவுடர் - 2 டீஸ்பூன்

 மேலும் படிக்க: தினமும் சேலை கட்டுவீங்களா? இந்த ஃபேஷன் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க அழகா இருப்பீங்க

தயாரிக்கும் முறை:

  • முதலில் ஆப்பிள், கேரட், பீட்ரூட் போன்றவற்றை தோல் சீவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதை அரைப்பதற்கு முன்னதாக கால் கப் மாதுளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதை வடிகட்டியால் வடிகட்டிய பின்னதாக இதனுடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் அகர் அகர் பவுடர் கலந்துக் கொள்ளவும்.
  • பின்னர் இதை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும். சூடு ஆறியவுடன் குளிர்சாதன பெட்டியில் ஐஸ் க்யூப் தயாரிக்கும் ட்ரோக்களில் ஊற்றி வைத்துவிடவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப் பின்னதாக வெளியில் எடுத்து தனியாக பிரித்துக் கொள்ளவும். இவற்றை காற்று புகாத ஜாடியில் வைத்துக் கொள்ளவும்.
  • இவ்வாறு தயாரிக்கும் ஜெல்லி போன்றுள்ள ஏபிசி க்யூப்களை 6 மாதம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிக்கலாம். எப்போது உங்களுக்குத் தேவையோ? அப்போது குளிர்ச்சியான தண்ணீர் கலந்து பானமாக குடிக்கலாம். இல்லை முகத்திற்கு அப்ளை செய்யலாம்.

 

  • இவ்வாறு செய்யும் போது சருமத்தில் உள்ள அழுக்கள் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும். கலரான தோற்றத்தையும் அளிக்கும். வைட்டமின் சி போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • இந்த ஏபிசி கம்மிகளை தயாரிப்பது ஒவ்வொரு நாளும் சாறு தயாரிப்பதில் உள்ள உங்கள் பிரச்சனையை தீர்க்கும், நீங்கள் இந்த கம்மிகளை தயாரித்து காற்று புகாத ஜாடியில் சுமார் 6 மாதங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.

பிற நன்மைகள்:

ஆப்பிள், கேரட், பீட்ரூட்டில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மாதவிடாய் பிரச்சனையைப் போக்கவும், செரிமானம் மேம்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

Image credit - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com