சர்க்கரை நோய் எனும் வாழ்க்கை முறை நோயால் உடலின் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்படலாம். இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால் அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதில் பக்கவாதம், நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை இழப்பும் அடங்கும். சர்க்கரை நோய் உடல் உறுப்புகளை பாதிப்பதோடு மட்டுமின்றி, சருமத்தையும் பாதிக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?
சர்க்கரை நோய் கழுத்து மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல்களை சான்றளிக்கப்பட்ட சர்க்கரை நோய் கல்வியாளரும், மூத்த ஊட்டச்சத்து நிபுணருமான சுஜாதா சர்மா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: விதைகளின் மிக அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
சர்க்கரை நோயாளி கழுத்தின் பின்புறம் கருமை அடையலாம். இவை அடர்ந்து, சற்று தடிமனாக காணப்படலாம். மேலும் இதன் அளவுகள் நபருக்கு நபர் மாறும் படலாம். கழுத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளான அக்குள், இடுப்பு, கை மடிப்பு போன்றவற்றிலும் கருந்திட்டுக்கள் தோன்றலாம். இந்நிலை அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சரும செல்களில் இருக்கும் அதிக அளவு இன்சுலின் காரணமாக இவை ஏற்படுகின்றன. மேலும் டைப்-2 சர்க்கரை நோய் அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படும். இதை தவிர்த்து செரிமானப் பாதை புற்றுநோய் போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளாலும் இது ஏற்படலாம்.
இந்த கருமையை நீக்குவதற்கான மருத்துவ சிகிச்சைகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை. இருப்பினும் இந்த கருமையை ஓரளவு குறைப்பதற்கு சரும மருத்துவரின் உதவியை நாடலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் சருமம் தடிமனாவதை தடுக்கலாம் மற்றும் கருமையையும் படிப்படியாக குறைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க பின்வரும் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
டைப்-2 நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்களில் உடல் பருமனும் ஒன்று. உடல் பருமனை தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் எந்தவொரு உடற்பயிற்சியை செய்வதற்கு முன், ஒரு மருத்துவர் அல்லது சுகாதார பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சர்க்கரை நோயாளிகளின் உணவில் நார்ச்சத்து நிறைவாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்க வேண்டும். அதிக கலோரி உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக மூலிகை டீயை குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நீங்கள் அறிந்திடாத சுக்கின் ஆரோக்கிய நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரி பார்க்க வேண்டியது அவசியம். சர்க்கரை பரிசோதனை இயந்திரத்தின் மூலம் உடனடி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இரத்த சர்க்கரையின் அளவை அறிந்த பிறகு உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தகுந்த மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com