herzindagi
balance hormones naturally in tamil

ஹார்மோன் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்

ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்கத்து, ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் அற்புதமான பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்...
Editorial
Updated:- 2023-03-30, 05:23 IST

ஹார்மோன் சமநிலையின்மையால் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சில வகையான நட்ஸ், பழங்கள், விதைகள் ,யோகா போன்றவற்றை தவறாமல் பின்பற்றுவது ஹார்மோன்களை சீராக்க வைத்து கொள்ள உதவும். இந்த பதிவில் ஹார்மோன்களை சீராக வைத்து கொள்ள உதவும் பானத்தை பற்றி பார்க்கலாம்.

இதுவும் உதவலாம் :ஆரோக்கியமான முறையில் வைட்டமின்கள் அதிகரிக்க உதவும் ஸ்மூத்தி ரெசிபிக்கள்

தேவையான பொருட்கள்

  • பாதாம் - 5
  • பேரீச்சம்பழம் - 5
  • ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை
  • இலவங்கப்பட்டை - ஒரு சிட்டிகை
  • இளநீர் - 200 மி.லி
  • சியா விதைகள் - 1 ஸ்பூன்

juice to balance hormones

செய்முறை விளக்கம்

  • பாதாம் மற்றும் பேரிச்சம்பழத்தை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும்அல்லது 5-6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • சியா விதைகளை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பேரீச்சம்பழத்தின் விதைகளை அகற்ற விடவும்.
  • சியா விதைகளைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் கலந்து அரைக்கவும்.
  • இந்த அரைத்த கலவையின் மேல் சியா விதைகளைச் சேர்த்து பரிமாறவும்.

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

  • நீர்ச்சத்துடன் எப்போதும் இருக்க முடியும்,மேலும் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
  • பேரீச்சம்பழம் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நலம் செய்கிறது.
  • பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இன்சுலின் உணர்தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
  • பாதாம் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல காரணி ஆகும்.
  • பாதாம் ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் உடலில் சக்தியை பாதுகாக்கிறது.
  • இளநீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு சிறந்த பொருள். இளநீர் எலக்ட்ரோலைட்டுகளின் முக்கிய காரணியாகும் மற்றும் இன்சுலின் உணர்தன்மையை அதிகரிக்கிறது.
  • பாதாம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்திற்கும் நல்ல பலன்களை தரக்கூடியது.
  • ஜாதிக்காய் செரிமானத்தை தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது. இதன் மூலம் வாயுவை நீக்குகிறது.
  • இலவங்கப்பட்டை செல்களில் குளுக்கோஸின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கிறது.
  • சியா விதைகள் இன்சுலின் உணரும் தன்மையை அதிகரிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.

juice for hormones

இதுவும் உதவலாம் :தினசரி சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com