herzindagi
diabateic eye care  image

Diabetes Eye Care: நீரிழிவு நோயாளிகள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள்!!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த நிபுணர் கூறியிருக்கும் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
Editorial
Updated:- 2023-08-11, 00:00 IST

இந்த உலகம் கண்களால் மிகவும் அழகாகத் தெரிகிறது. கண்கள் கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் என்று சொன்னால் தவறில்லை. கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. ஆனால் நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் கண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோயில் உயர் இரத்த சர்க்கரை கண்களின் இரத்த நாளங்களுக்கு சேதம் விளைவிக்கும் மற்றும் இது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியாது என்றாலும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதன் மூலம் இதை தடுக்க முடியும். மூத்த கண் நிபுணர் டாக்டர். சஞ்சய் தியோடியா சில உதவி குறிப்புகளை கூறியிருக்கிறார். 

 

இந்த பதிவும் உதவலாம்: காலையில் வெறும் வயிற்றில் 6 வகை மூலிகை தண்ணீரை குடித்தால் நிகழும் மாற்றங்கள்!!

நீரிழிவு நோயால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

நீரிழிவு நோய் பல உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கலாம் மற்றும் கண்களையும் பாதிக்கலாம். கண்பார்வை பாதுகாப்பாக இருக்க நீரிழிவு நோயால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்துகொள்வது அவசியம். நீரிழிவு ரெட்டினோபதியில் அதிக கொழுப்பு, உயர் இரத்த சர்க்கரை, புகைபிடித்தல், கர்ப்பம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கம் போன்ற விஷயங்கள் பிரச்சனைகளால் மோசமாடைகிறது. 

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும்

diabetic

நீரிழிவு நோயில் பெண்களுக்கு பொதுவாக உயர் இரத்த அழுத்தம் இருக்கும், இதனுடன் இரத்த சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக கண்களின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீரிழிவு ரெட்டினோபதியின் அபாயத்தைக் குறைக்க இரத்த அழுத்தத்தை 140/80 அல்லது அதற்கும் குறைவாக வைத்திருக்கவும். 

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்

bad cholastrol

எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இரத்தப் பரிசோதனைகள் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது தவிர நிறைய தண்ணீர், ஆரோக்கியமான உணவு போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உடற்பயிற்சி சிறந்த வழியாகும். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஆக்ஸிஜன் உட்கொள்ளல் அதிகரிக்கிறது இதனால் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு கண்களும் பயன்பெறும். தினமும் சுமார் 20-30 நிமிடங்கள் ஜாகிங், நடனம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். 

 நிறைய தண்ணீர் குடிக்கவும்

drinking water

தண்ணீர் குடிப்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் கண்களில் ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது. உடலில் சரியான அளவு தண்ணீர் இருக்கும்போது, சிறுநீரகங்கள் கழிப்பறை வழியாக உடலில் இருந்து அதிகப்படியான குளுக்கோஸை அகற்றும், ஆனால் குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும்போது இது சாத்தியமில்லை. அதனால்தான் உடற்பயிற்சியுடன் சேர்த்து நாள் முழுவதும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: பெரும் தொல்லையாக இருக்கும் குறட்டையில் இருந்து விடுபட இதை பாலோ பண்ணுங்கள்!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com