நாள் முழுவதும் வேலை மற்றும் சோர்வுக்குப் பிறகு கிட்டத்தட்ட அனைவரும் இரவில் நிம்மதியாக தூங்க விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் துணை தூங்கும் நேரத்தில் சத்தமாக குறட்டை விட ஆரம்பித்தால் தூக்கமில்லாத இரவாக போய்விடுகிறது. பொதுவாக குறட்டை என்பது சாதாரணமாகத் தோன்றும், ஆனால் சில சமயங்களில் இந்த குறட்டை ஒரு தீவிர நோயாகவும் மாறும். இந்த பிரச்சனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது.
குறட்டையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் வீட்டு வைத்தியம் ஒன்றை பார்க்கலாம். இதைப் பின்பற்றுவதன் மூலம் இந்த சிக்கலை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். எனவே தாமதிக்காமல் இந்த வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மலச்சிக்கல் பிரச்சனையா... இதோ சரியான தீர்வு!!
குறட்டை பிரச்சனையை சமாளிக்க ஏலக்காய் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம். ஏலக்காய் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குறட்டை பிரச்சனையை மிக விரைவில் நீங்கும். இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் அரை அல்லது ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடியை கலந்து இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
சுத்தமான நெய்யில் சில மருத்துவ குணங்கள் இருப்பதால், அது அடைபட்ட மூக்கை திறக்க பெரிதும் உதவுகிறது. குறட்டை பிரச்சனைக்கு நெய்யை பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காணலாம். நெய்யை லேசாக சூடாக்கி மூக்கில் ஓரிரு துளிகள் போட்டால் குறட்டைப் பிரச்சனை நீங்கும். இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இதை தவறாமல் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
குறட்டையை நீக்க ஆலிவ் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடைபட்ட மூக்கை திறக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் எண்ணெயில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே குறட்டை பிரச்சனை தீரும்.
குறட்டை பிரச்சனையை உடற்பயிற்சியின் மூலமும் பெரிய அளவில் சமாளிக்கலாம். குறட்டைக்கு சில யோகா பயிற்சிகள் உள்ளது அதைச் செய்வதன் மூலம் குறட்டை நிறுத்தப்படும். இதற்கு, தொடர்ந்து அனுலோம் விலோம் பிராணாயாமம் மற்றும் பிராமரி பிராணாயாமம் போன்ற ஆசனங்கள் மூலம் எளிதாக சமாளிக்கலாம். நீங்கள் சரியாக தூங்கினீர்களா இல்லையா என்பது உங்கள் தூக்க முறையைப் பொறுத்தது. எப்பொழுதும் ஒரு பக்கம் மட்டும் தூங்குங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் ஜூஸ் குடித்தால், உடலில் இந்த 5 அதிசய மாற்றங்களை காணலாம்!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com