Mouth Ulcer : வாய் புண் வருவதற்கான காரணம் என்ன? இதற்கான ஒரு எளிய தீர்வையும் தெரிந்துகொள்ளுங்கள்!

வாயில் புண் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மற்றும் அதிலிருந்து விடுபட உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியத்தையும் இன்றைய பதிவில் காணலாம்.  

mouth ulcer quick remedy

வாழ்வின் ஏதோ ஒரு கால கட்டத்தில் வாய் புண்ணால் நீங்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கலாம். இது ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும் வாயில் புண் வரும் பொழுது உணவு சாப்பிடுவது கடினமாக இருக்கும். வாய்ப்புண் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மேலும் இது எந்த வயதினருக்கும் வரக்கூடும். ஒரு சில சமயங்களில் புண் கடினமாக இருக்கும் பொழுது தாங்க முடியாத வலியும் ஏற்படும். தூக்கமின்மை, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் முறையற்ற உணவு வழக்கங்களால் வாயில் புண் வரலாம். அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயமாக மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டும்.

வாய்ப்புண் ஏற்பட்டால் அதை சுலபமாக சரி செய்திட முடியும். இதற்கான குறிப்புகளை மருத்துவர் ஷீகா ஷர்மா அவர்கள் பகிர்ந்துள்ளார். முதலில் வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம்.

வாய்ப்புண் வருவதற்கான காரணங்கள்

get rid of mouth ulcer

  • வயிற்றில் முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான் வாயில் புண் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.
  • வயிற்றை சரியாக சுத்தம் செய்யாதவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்படுபவர்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படலாம்.
  • வயிற்றில் சூடு அதிகரிக்கும் பொழுதும் வாயில் புண் வரும்.
  • உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் வாய்ப்புண் வரலாம்.
  • நல்ல முழுமையான தூக்கம் இல்லாவிட்டாலும் இந்த பிரச்சனை வரக்கூடும்.
  • நீண்ட காலமாக நீடிக்கும் மன அழுத்தம்.
  • உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் வாய்ப்புண் வரலாம்.
  • தொற்று அல்லது அதிகரித்த பித்தமும் வாய்ப்புண்களை ஏற்படுத்தும்.

வாய் புண் குணமாக வீட்டு வைத்தியம்

milk for ulcer problem

பெரும்பாலும் வாய் புண் 1-2 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதை சரி செய்வதற்கான குறிப்பை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம். வாய் புண்ணிலிருந்து விடுபட காய்ச்சாத குளிர்ந்த பாலை வாயில் வைத்து 2-3 நிமிடங்களுக்கு சுழற்ற வேண்டும். இதை 3-4 முறை செய்யவும். இந்த குறிப்பை பின்பற்றி வாய் புண்களில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இது சூட்டை குறைத்து வாய் புண்களில் இருந்து நிவாரணம் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: மலம் கழிக்க கடினமாக உள்ளதா? சிரமம் இல்லாமல் மலம் கழிக்க இதை ட்ரை பண்ணுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP