herzindagi
image

Mouth Ulcer: வாய்ப்புண் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான எளிய வீட்டு வைத்தியம்!

தூக்கமின்மை, மன அழுத்தம், வைட்டமின் குறைபாடு, பல் துலக்கும் போது பயன்படுத்தப்படும் பேஸ்ட் போன்ற பல காரணங்களால் நம்மில் பலக்கு மவுத் அல்சர் எனப்படும் வாய்ப்புண் பாதிப்பு ஏற்படுகிறது. இதை எளிமையான முறையில் சரிசெய்ய வீட்டிலேயே சில வைத்திய முறைகளைப் பின்பற்ற வேண்டும்.  
Editorial
Updated:- 2025-12-15, 12:52 IST

நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் வாய்ப்புண் பாதிப்பால் அவதிப்பட்டு இருப்போம். சிறிய கொப்புளங்களாக ஆரம்பிக்கும் போது கவனிக்க தவறும் பட்சத்தில் பெரிய புண்களாக மாறி அதீத வலியைக் கொடுக்கும். இதனால் காரமில்லாத உணவுகளைக் கூட சாப்பிட முடியாமல் பெரும் அவதிப்படுவோம். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் வீட்டிலேயே சில எளிய வைத்திய முறைகளைப் பின்பற்றி வாய்ப்புண் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். என்னென்ன? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

தேங்காய் எண்ணெய்:

வாய்ப்புண் பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாயில் சிறிய கொப்புளங்களாக இருக்கும் போதிலிருந்து கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும். இதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் வலி நிவாரணியாக செயல்படுவதோடு பெரிய புண்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

கற்றாழை சாறு:

வாய்ப்புண்கள் அதிகம் ஏற்படுவதற்கு பாக்டீரியா தொற்றுகளும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே இந்த பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றால் கற்றாழை சாறைக் கொண்டு வாய் கொப்பளிக்கவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்ப்புண்களைக் குணமாக்குவதற்கு உதவியாக உள்ளது.

உப்பு தண்ணீர்:

பாக்டீரியா தொற்றுகளைச் சரி செய்ய வேண்டும் என்றால் வெதுவெதுப்பான நீரில் உப்பைக் கலந்து தினமும் வாய்க் கொப்பளிப்பது நல்லது.

மேலும் படிக்க: சீரான குடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

தேன்:

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். புண்ணின் மீது நேரடியாக தேனை தடவி விட்டு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவுடம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்ப்புண் பாதிப்புகளைக் குணப்படுத்த உதவியாக இருக்கும்.

கொய்யா இலைகள்:

வாய்ப்புண் மற்றும் பல் வலிக்குத் தீர்வு காண்பதில் கொய்யா இலைகளைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வாயில் ஏற்படக்கூடிய புண்களைச் சரி செய்ய உதவுகிறது.

மேலும் படிக்க:  எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? தினமும் இந்த பழக்கங்களை அவசியம் கடைபிடிக்கவும்

 


வாய்ப்புண் பாதிப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியது?

  • வாய்ப்புண் பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றால் சர்க்கரை அல்லது காபின் கலந்த பானங்கள் அதிகம் பருகுவதைத் தவிர்க்கவும். இதனால் வாயில் உள்ள புண்களுக்கு அதிக எரிச்சல் ஏற்படும்.
  • தினமும் இரண்டு முறை பல்துலக்கும் போது பாக்டீரியாக்கள் அதிகம் பற்களில் சேர்வதில்லை.
  • 2 அல்லது 3 லிட்டருக்கு மேல் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகளவு தண்ணீர் அருந்தும் போது உடலில் நீர்ச்சத்துக்கள் குறையாமல் இருக்கும்.
  • காரமான மற்றும் அதிக புளிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • புண்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒருமுறையாவது மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

Image Source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com