herzindagi
home remedy constipation problem easy

Motion Problem : மலம் கழிக்க கடினமாக உள்ளதா? சிரமம் இல்லாமல் மலம் கழிக்க இதை ட்ரை பண்ணுங்க!

காலையில் எழுந்தவுடன் வயிறை சுத்தம் செய்யாவிட்டால் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மலச்சிக்கலை சரி செய்வதற்கான வழியை பதிவில் காணலாம்.
Editorial
Updated:- 2023-07-13, 09:08 IST

மலச்சிக்கல் பிரச்சனை ஏன் கடுமையாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதிகாலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்றைய நாள் முழுவதும் தொந்தரவாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். வீட்டில் கிடைக்கக்கூடிய சில எளிமையான பொருட்களைக் கொண்டே இதற்கு தீர்வு காணலாம்.

இது தொடர்பான பதிவை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். நிபுணரின் கருத்துப்படி மலச்சிக்கல் வாத தோஷத்தின் தீவிரத்தால் ஏற்படுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க இரவு வேளையில் இதை செய்தால் போதும்!

 

கடினமான மலம் அல்லது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

  • சரியாக சாப்பிடாமல் அல்லது தண்ணீர் குடிக்காமல் இருந்தால்
  • காய்ந்த, குளிர்ந்த, காரமான மற்றும் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்.
  • உடலின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்காமல் இருந்தால்
  • உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால்
  • வளர்சிதை மாற்றம் சீராக இல்லை என்றால்
  • உங்களுடைய தூக்கம் மற்றும் விழிக்கும் நேரத்தின் வழக்கம் மாறுபடும் பொழுது 
  • இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால்
  • குறைந்த உடல் செயல்பாடு அல்லது அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையால் மலச்சிக்கல் ஏற்படலாம்.
  • இதைத் தவிர ஒரு சில உடல்நல பிரச்சனைகள் காரணமாகவும், உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றத்தின் விளைவாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

மலச்சிக்கல் அல்லது கடினமான மலம் போன்ற பிரச்சனைகளை தடுக்க பலரும் மலமிளக்கிகளை பயன்படுத்துகின்றனர். இது மிகவும் தவறான பழக்கம். இதைத்தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது குடலுக்கு சேதம் ஏற்படலாம். ஆரோக்கியமற்ற இது போன்ற பழக்கங்களுக்கு பதிலாக இயற்கையான சில வழிகள் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும்.

மலம் எளிதாக வெளியேற வீட்டு வைத்தியம்

நம் வீட்டு சமையல் அறையில் கிடைக்கக்கூடிய ஒரு சில பொருட்களைக் கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம்.

பசும்பால் நெய்

milk for hard stool problem

இது இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. பசு நெய் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். இதில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளதால், இது உடலில் சரியாக உறிஞ்சப்படுகிறது எனவே எடை அதிகரிப்பு பற்றி கவலைப்பட வேண்டாம்.

இதை செய்வதற்கு சுத்தமான பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் நெய்யை பசும்பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றிலும் எடுத்துக் கொள்ளலாம்.

உலர் திராட்சை

கருப்பு உலர் திராட்சை மலச்சிக்கல் மற்றும் கடினமான மலம் பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதற்கு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எடுத்துக் கொள்ளலாம். உலர் திராட்சையை ஊற வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

நெல்லிக்காய் ஜூஸ்

hard stool home remedy

இதில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை நீக்குவதுடன் பல உடல் நல பிரச்சனையை போக்கவும் உதவுகிறது. ஃபிரெஷான நெல்லிக்காயை கொண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம் அல்லது நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இதை சரியான அளவுகளில் எடுத்து பயன்பெறவும். இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் வரலாம்.

வெந்தயம் 

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அதிகாலையில் தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இல்லையெனில் காலையில் ஊற வைத்து இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக் கொள்ளலாம். வெந்தயத்தை அப்படியே சாப்பிட்டு தண்ணீர் குடிப்பது சரியல்ல. இதனை ஊற வைத்த பின்னரே சாப்பிட வேண்டும். 

 

இந்த பதிவும் உதவலாம்: ஒரே மாதத்தில் உடல் பருமன் குறைய 4 எளிய குறிப்புகள்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com