சிறுதூர பயணங்களுக்கு கார் பைக் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்தலாம். இதனால் பெட்ரோல் அல்லது டீசலுக்கான செலவை மிச்சப்படுத்துவதுடன் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுக்களை கட்டுப்படுத்தலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தினமும் சைக்கிளில் பயணம் செய்யலாம். வயது வரம்பு இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அரை மணி நேரமாவது தினமும் சைக்கிள் ஓட்ட முயற்சி செய்யலாம்.
சைக்கிள் ஓட்டும் பொழுது முழு உடலும் ஈடுபடுவதால், இந்த பயிற்சி ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் பல நன்மைகளை தரும். சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி டாக்டர் யோகேஷ் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: யாரெல்லாம் வெந்தயம் சாப்பிட கூடாது தெரியுமா?
சைக்கிள் ஓட்டுவதன் மூலம் எரிபொருளை மிச்சப்படுத்தலாம். இது எந்தவித மாசுபாட்டையும் ஏற்படுத்தாது. ஒரு சிலர் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லவும் பைக் அல்லது கார் போன்ற வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். இதற்கு பதிலாக உங்கள் வீட்டை சுற்றியுள்ள இடங்களுக்கு செல்ல சைக்கிளை பயன்படுத்தலாம். இந்த மாற்றம் உங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
சைக்கிள் ஓட்டுதல் குடல் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைப்பதாக பல நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவரின் ஆலோசனையுடன் சைக்கிள் ஓட்டலாம், இது அவர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: நன்கு பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
மன அழுத்தத்தில் இருந்து விடுபட தினமும் சைக்கிள் ஓட்டலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இயற்கையான வெளிக்காற்றை சுவாசித்தபடி, கை கால் மற்றும் மனதை ஒரு முகப்படுத்தி செய்யப்படும் இந்த அற்புதமான பயிற்சியை நீங்களும் செய்யலாம். மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட இது உங்களுக்கு நிச்சயமாக உதவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com