ஆரோக்கியமான முறையில் வைட்டமின்கள் அதிகரிக்க உதவும் ஸ்மூத்தி ரெசிபிக்கள்

உங்கள் உணவில் வைட்டமின்களின் அளவை அதிகரிக்க சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மூத்திகளை எவ்வாறு செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு கூற போகிறோம்...

healthy smoothies in tamil

பெரும்பாலான மக்கள் கட்டுடலை தக்க வைக்கும் ஆசை கொண்டவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் உணவில் வைட்டமின்களின் அளவை அதிகரிக்க கடைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள், ஆனால் இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விருப்பப்பட்டால், வீட்டில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு வைட்டமின் ஸ்மூத்திஸ் தயார் செய்யலாம். ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான கிரண் குக்ரேஜா இது தொடர்பான விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாதுளை மற்றும் கேரட் ஸ்மூத்தி

பொதுவாக சைவ உணவு சாப்பிடுபவர்கள் இந்த ஸ்மூத்தியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம், தேங்காய்த் தண்ணீரைக் கொண்டும் இதை செய்யலாம். இந்த ஸ்மூத்தி குடிப்பதன் மூலம், வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் K, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

தேவையான பொருட்கள்

  • பேரிக்காய் - 1/2 பழம்
  • மாதுளை - 1/2 பழம்
  • கேரட் - 1/2 கேரட்
  • ப்ளம்ஸ் - 1

இதுவும் உதவலாம் :நீங்கள் அறிந்திடாத சுக்கின் ஆரோக்கிய நன்மைகள்

செய்முறை விளக்கம்

  • முதலில்,மிக்சியில் பேரிக்காயை போடவும்.
  • இதற்குப் பிறகு அதில் மாதுளை மற்றும் கேரட் சேர்க்க வேண்டும். பின்னர் ப்ளம்ஸ் மற்றும் பீட்ரூட் சேர்க்க வேண்டும்.
  • இப்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்க்கவும்.
  • பிறகு இவற்றை ஒன்றாக அரைக்கவும், இத்துடன் தனியாக உலர்ந்த பழங்களையும் சேர்க்கலாம்.
smoothie for glowing skin

என்ன நன்மைகள் கிடைக்கும்?

இந்த ஸ்மூத்தி குடிப்பது வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் B6 மற்றும் பல வைட்டமின்கலின் ஊட்டச்சத்துக்களை பெறுவீர்கள். இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் பல்வேறு நோய்கள் உண்டாகக்கூடிய அபாயத்தையும் குறைக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் வாழைப்பழத்தில் ஸ்மூத்தி

இந்த ஸ்மூத்தி உங்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை தரும் ஒன்றாகும். இதை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் உங்கள் காலை உணவுடன் சேர்த்துக் கொள்ள ஏற்றது.

தேவையான பொருட்கள்:

  • ஊறவைத்த பாதாம் - 8-10
  • வாழைப்பழங்கள் - 1 கப் நறுக்கியது
  • தேன் - 2 ஸ்பூன்
  • உலர் திராட்சை - ½ கப்
  • பால் - ½ கப்

செய்முறை விளக்கம்

  • முதலில் பாதாம் பருப்பை மிக்சியில் போட வேண்டும்.
  • அதன் பிறகு, அதில் நறுக்கிய வாழைப்பழம் மற்றும் திராட்சை சேர்க்க வேண்டும்.
  • பின்பு தேன் சேர்க்க வேண்டும். பிறகு பால் சேர்த்து கலக்க வேண்டும்.

இதுவும் உதவலாம் :தினசரி சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

nuts smoothie

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

இந்த ஸ்மூத்தி உங்கள் உடலில் வைட்டமின் B, வைட்டமின் A மற்றும் C தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், செரிமானம் மற்றும் எடையைக் கட்டுப்படுத்துவதில் இது சிறப்பாக செயல்படுகிறது. வாழைப்பழத்தில் தயாமின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பல ஊட்டசத்துக்களும் உள்ளன.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP