
வேர்க்கடலை என்பது விலை மலிவான, ஆனால் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் ஒரு உணவு பொருளாகும். இதை அன்றாடம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது. தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை இதில் காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்:
வேர்க்கடலை நார்ச்சத்து நிறைந்ததாகவும், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycemic Index) கொண்டிருப்பதாலும், இது சர்க்கரை உறிந்து கொள்ளப்படுவதை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே, தினமும் வேர்க்கடலை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல சிற்றுண்டியாகும்.

மேலும் படிக்க: Apricot benefits: தினமும் உலர்ந்த பாதாமி பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து, சிறந்த செரிமானத்திற்கு பங்களிக்கிறது. இது குடல் இயக்கங்களை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம், செரிமான செயல்முறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துகிறது.
வேர்க்கடலையில் வைட்டமின் ஈ மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் போதுமான அளவில் உள்ளன. இதை தினமும் உட்கொள்வது உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. மேலும், இது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை எளிதாக பெறச் செய்கிறது.
மேலும் படிக்க: Jowar millet benefits: கூந்தல் ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை சோளத்தினால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
வேர்க்கடலை தாவர அடிப்படையிலான புரதத்தின் (Plant-based protein) நம்பகமான மற்றும் இயற்கையான ஒரு ஆற்றல் மையம் என்று கூறலாம். இது தசைகளை வலிமையாக்குவதற்கும், ஒட்டுமொத்த உடல் வலிமைக்கும் மிக அவசியமானது. இது ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.
வேர்க்கடலையில் உள்ள நியாசின் (Niacin) மற்றும் ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) போன்ற ஊட்டச்சத்துகள், அறிவாற்றல் செயல்பாட்டை சீராக்குகின்றன. இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன. எனவே, தினமும் வேர்க்கடலை சாப்பிடுவது இருதய ஆரோக்கியத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் உதவுவதன் மூலம் இருதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவது உடலுக்கு தேவையான மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இது உங்கள் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com