தலைவலி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வேலைப்பளு முதல் தூக்கமின்மை வரை பல்வேறு காரணங்களால் தலைவலி வரலாம். சில சமயங்களில் தலைவலி கடுமையாகும் போது, மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முறை தலைவலி வரும் பொழுதும் இவ்வாறு மருந்துகள் எடுத்துக் கொள்வது சரியா? நிச்சயம் இல்லை மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இன்றி அடிக்கடி பயன்படுத்தும் பொழுது, அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில் உங்கள் வலியை குறைக்க இயற்கையான மூலிகைகளை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். இவை எளிதாக கிடைக்கும், அதே சமயம் உங்களுக்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
தலைவலிக்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த இயற்கையான மூலிகைகளை முயற்சி செய்து பார்க்கலாம். இதைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
இந்த பதிவும் உதவலாம்: ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்ள மாலையில் இதை சாப்பிடுங்க!
பொதுவாக மருதாணி இலைகளை, அரைத்து அதை கைகளுக்கு வைப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை ஒரு சிலர் இயற்கையான ஹேர்டை ஆகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மருதாணி இலைகள் உங்கள் தலைவலியையும் குணப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? மருதாணி இலைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் இலைகளை நீக்கிவிட்டு அந்த நீரினை மட்டும் குடிக்கலாம். இந்நீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் மருதாணியை அரைத்து தலைக்கு தடவலாம். இது உங்களுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமின்றி தலைவலியையும் குறைக்க உதவும்.
வேப்பிலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது புண் போன்றவற்றிற்கு வேப்ப இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற வேப்ப எண்ணையை பயன்படுத்தலாம். வீட்டில் வேப்ப எண்ணெய் இல்லையெனில் சில வேப்ப இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டு சிறிது நேரம் வெயிலில் வைக்கவும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து, உங்களுக்கு தலை வலிக்கும் பொழுது எல்லாம் பயன்படுத்தலாம்.
இது பெண்களின் அழகு பராமரிப்பு வழக்கத்தில் ஒரு முக்கியமான பொருளாகும். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. இதற்கு பிரெஷ் ஆக எடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை உங்கள் நெற்றி மீது தடவலாம். நீங்கள் விரும்பினால் இதில் இரண்டு துளி கிராம்பு எண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து பயன்படுத்தவும். இந்த கலவையை உங்கள் நெற்றியின் மீது தடவி 20 நிமிடங்கள் வரை ஓய்வெடுக்கவும். கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை தலைவலியை குறைத்து உங்களை மென்மையாக உணர வைக்கும்.
புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன, இவை பல நோய்களுக்கு நன்மை பயக்கின்றன. மன அழுத்தம் அல்லது வானிலை மாற்றதினால் தலைவலி ஏற்பட்டால், புதினா இலைகளை அரைத்து நெற்றியில் தடவலாம். நீங்கள் விரும்பினால் புதினா இலைகளுக்கு பதிலாக புதினா எண்ணெயையும் பயன்படுத்தலாம். தலைக்கு புதினா எண்ணெயை கொண்டு மென்மையாக மசாஜ் செய்தால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். உடலின் மற்ற பகுதிகளில் வலி இருந்தாலும் புதினா எண்ணெயை பயன்படுத்தலாம்.
இந்த மூலிகை தலைவலிக்கு மிகவும் நல்லது. வில்லோ மரங்களின் பட்டை அல்லது இலைகளைக் கொண்டு டீ அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். இதை துளசி டீ போன்ற டீ வகைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். தலைவலிக்கான சிறந்த மூலிகைகளில் வெல்லோ பட்டையும் ஒன்று. தலைவலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: 5 கிலோ வரை எடை குறைய நிபுணர் பரிந்துரை செய்யும் டயட் பிளான்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com