கோடை நாட்களில், வெயிலின் தாக்கத்தினால் சோர்வாக உணரலாம். மேலும் குறைந்த உடல் செயல்பாடினால் உடல் எடையை குறைப்பது சற்று கடினமாகவும், சவாலாகவும் இருக்கலாம். ஆனால் கோடை காலத்திலும் உங்களால் உடல் எடை மற்றும் கொழுப்பை சுலபமாக குறைக்க முடியும். இதற்கு உதவக் கூடிய ஒரு அற்புத பானத்தை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். இது எடை இழப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்தும். இந்த சூடான நீரில் ஒரு சில ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொண்டால் உங்கள் இலக்கை விரைவில் அடையலாம். இந்தக் கோடைகால பானம் உங்கள் உடல் எடையை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். இது குறித்த தகவல்களை ஆயுர்வேத நிபுணரான டாக்டர் தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: தலைவலியை போக்கும் ஐந்து மூலிகைகள்
சப்ஜா விதைகளில் ஆல்பா லினோலெனிக் அமிலம் (ALA) நிறைந்துள்ளது, இது உடலில் கொழுப்பை எரிக்கும் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. மேலும் சப்ஜா விதைகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேடுகளின் உறிஞ்சுதலை குறைக்கிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது.
சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைவாகவும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. இவை அனைத்தும் உடல் எடையை குறைக்க அவசியமானவை. சப்ஜா விதைகளில் நார்ச்சத்து, புரதம், அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் யாவும் தேவையற்ற பசி ஆர்வத்தை குறைக்கின்றன.
எளிதில் ஜீரணிக்க கூடிய இந்த எலுமிச்சை உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இதில் சிறுநீரை ஆதரிக்கும் பண்புகளும் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் கொழுப்பை எரிக்கவும் உதவும். எலுமிச்சையை தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளும் பொழுது கொழுப்பை வேகமாக குறைக்கலாம். இதில் கொழுப்பை எரிக்கும் பண்புகளுடன் ஃபோலேட், தியாமின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. ஆகையால் உடல் எடையை குறைக்க எலுமிச்சை சிறந்தது.
ஆயுர்வேதத்தின் படி இனிப்பு சுவை நிறைந்த இந்த தேன் உங்களுடைய கொழுப்பை எரிக்க உதவும். இது இனிப்பு சுவையின் மீது ஏற்படும் ஆர்வத்தை குறைக்கிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது.
கோடையில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உடல் எடையை குறைக்கவும் வெந்நீர் குடிக்கலாம். வெந்நீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை செயல்படுத்துகிறது. இது எடையை குறைக்கவும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவும். இதனால் செரிமான மண்டலத்தால் கொழுப்புகளை எளிதாக எரிக்க முடியும்.
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் வெந்நீரைக் குடிப்பது கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்துகிறது. இதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்க்கும் பொழுது அதன் விளைவை அதிகரிக்கலாம். இது விரைவான எடை இழப்புக்கு வழி வகுக்குறது. ஆகையால் காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த பானத்தை குடித்து பயன்பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலை விரட்டிட காலையில் எழுந்தவுடன் இதை செய்யுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com