herzindagi
warm water empty stomach every morning

Warm Water Benefits : தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

சிறிய நல்ல மாற்றங்களும் பெரிய முன்னேற்றங்களுக்கு உதவும். அந்த வகையில் தினமும் ஒரே ஒரு கிளாஸ் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய பல அற்புத நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறியலாம்…
Updated:- 2023-09-08, 08:38 IST

Warm Water Benefits : உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் நீங்கள் என்றும் இளமையுடன் அழகாக இருக்கலாம். குறிப்பாக வெந்நீர் குடிப்பது உடலின் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடித்து வந்தால் ஃபிட்டாக இருப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். இது செரிமான மண்டலத்திற்கும் அதிக நன்மைகளை தருகிறது. உங்களுடைய காலைப்பொழுதை ஒரு கிளாஸ் வெந்நீருடன் தொடங்கினால் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது குறித்த தகவல்களை டாக்டர் சரத் மல்கோத்ரா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: வாய் விட்டு சிரித்தால், இதய நோயும் விட்டு போகுமா?

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

warm water every morning ()

  • காலையில் வெந்நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இவ்வாறு காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் மலம் எளிதாக வெளியேறும் இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கிறது.
  • வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெந்நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இறந்த சரும செல்களை சீரமைக்கவும் உதவுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. வெந்நீர் குடிப்பது சருமத்தை இளமையாக வைத்திருப்பதுடன் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் வெந்நீர் குடிக்கலாம்.
  • வெந்நீர் குடிப்பது உச்சந்தலையிலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உச்சந்தலைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால், கூந்தல் வலுப்பெறும் மற்றும் முடி உதிர்வையும் தடுக்கலாம்.
  • வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். இதை காலையில் எடுத்துக் கொள்ளும் பொழுது வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும். இதனால் கொழுப்புகளை வேகமாக எரிக்கலாம்.
  • தினமும் வெந்நீர் குடிப்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

இதை கவனித்துக்கொள்ளுங்கள் 

warm water every morning benefits

நிபுணரின் கருத்துப்படி தொண்டை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனை அல்லாதவர்களுக்கு வெந்நீர் அதிக நன்மைகளை தரும். மேலும் இதை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் மட்டுமே முழு நன்மைகளையும் பெற முடியும். காலையில் அதிகமாக வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. எனவே அளவோடு வெந்நீர் குடித்து பயன்பெறுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com