herzindagi
laughter for heart benefit

Laughter Heart Health : வாய் விட்டு சிரித்தால், இதய நோயும் விட்டு போகுமா?

நீங்கள் சிரிக்கும்போது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், அதே சமயம் சிரிக்கும் பொழுது ஆழமாக சுவாசிப்பதால் இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்...
Editorial
Updated:- 2023-09-04, 17:00 IST

சிரிப்பு உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது: வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒவ்வொரு நோயிற்கான தீர்வும் உங்கள் சிரிப்பில் தான் ஒளிந்திருக்கிறது. உங்கள் சிரிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும்  நன்மை பயக்கும். குறிப்பாக சிரிப்பது இதய நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. சிரிப்பதால் இதயத்திற்கு கிடைக்கும் நன்மைகளை PSRI மருத்துவமனையின் இருதய மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கவுரவ் குப்தா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

சிரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா?

laughter for heart health

சிரிப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நாம் சிரிக்கும்போது மூளை எண்டோர்பின் மற்றும் டோபமைன் எனும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. எண்டோர்பின் ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைத்து உயர் இரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் தமனிகளில் சேதம் போன்ற கடுமையான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இதனுடன் டோபமைன் ஹார்மோனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் உணர முடியும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 1 உணவு போதும், குறைந்த செலவில் இதய நோய்களை தடுக்கலாம்!

சிரிப்பு இதயத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது?

laughing benefits for heart

சிரிப்பு இதயத்தை பலப்படுத்துகிறது. நீங்கள் சிரிக்கும்போது, இரத்த நாளங்களின் செயல்திறன் அதிகரிக்கிறது. சிரிப்பு இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது, இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. தினமும் சிரிப்பது உடலில் நைட்ரிக் ஆக்சைடைத் தூண்டுகிறது. நைட்ரிக் ஆக்சைடு நரம்புகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் சத்தமாக சிரிக்கும்போது உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கும். மேலும் நீங்கள் ஆழமாக சுவாசிப்பதால் உடலில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆரோக்கியமாக இருப்பவர்கள் வெளிப்படையாக சிரிக்க வேண்டும். இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை சீரான உணவு, வழக்கமான உடல் செயல்பாடு, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, மன அழுத்த மேலாண்மை மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இப்படி கிராம்பு டீ குடித்து பாருங்க, எடை மளமளவென குறையும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com