சுவை நிறைந்த வாழைப்பழங்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் C, B6, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனிசு போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. உடலை சீரமைப்பது முதல் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவது வரை வாழைப்பழம் தரும் நன்மைகள் ஏராளம்.
பல நிபுணர்களும் வாழைப்பழங்களை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் பின்வரும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இப்படி கிராம்பு டீ குடித்து பாருங்க, எடை மளமளவென குறையும்!
வாழைப்பழத்தில் 105-110 கலோரிகள் வரை இருக்கலாம். இந்நிலையில் அதிகமாக வாழைப்பழங்களை சாப்பிடும் பொழுது அது உடன் பருமனுக்கு வழிவகுக்கிறது. இதை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடல் எடை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.
சுவையும் சத்துக்களும் நிறைந்த வாழைப்பழங்கள் ஒற்றைத் தலைவலியையும் தூண்டுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள டைரமைன் என்ற பொருளே இதற்கு காரணமாகும். இது வாழைப்பழத்தின் தோலில் அதிக அளவில் காணப்படுகிறது. நாம் பெரும்பாலும் வாழைப்பழக்கத்துடன் ஒட்டி இருக்கும் நார் போன்று பகுதியையும் தவறுதலாக சாப்பிட்டு விடுகிறோம். இது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக ஏற்கனவே ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வாழை பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பொட்டாசியத்தை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் நிலையை ஹைபர்கேலீமியா என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு நாளைக்கு 18 கிராமுக்கு மேல் பொட்டாசியம் உட்கொள்வது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இதனை அதிகமாக சாப்பிடும் பொழுது குமட்டல், அதிக நாடித் துடிப்பு, படபடப்பு, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் மாரடைப்புக்கு போன்று அறிகுறிகளையும் உணரலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் செயலில் உள்ள உறுப்புகளை அமைதிப்படுத்துகிறது. இது மூளையில் ஒரு நிதானமான விளைவை உருவாக்குகிறது. ஆனால் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவது எப்பொழுதும் மந்தமான அரை தூக்க நிலையை ஏற்படுத்தும்.
வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் அல்லது நன்கு பழுக்காத காயாக இருக்கக்கூடிய வாழைப்பழங்களை சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகலாம். இது குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். நன்கு பழுக்காத வாழைப்பழங்களை சாப்பிடும் பொழுது செரிமான செயல்முறை பாதிக்கப்படலாம். இது மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
சிறந்த ஆரோக்கிய நன்மைகளை பெற பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் மற்றும் சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 1 உணவு போதும், குறைந்த செலவில் இதய நோய்களை தடுக்கலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com