இரவு சரியாக தூக்கம் வரவில்லையா?
இரவு முழுவதும் தூக்கம் வர காத்திருக்கிறீர்களா?
இதை சரி செய்வதற்கான ஒரு சிறந்த வழி பிஸ்தாவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது தான். இது உங்களுக்கு சற்று விசித்திரமாக தோன்றலாம். ஆனால் உண்மையில் பிஸ்தா சாப்பிடுவது நல்ல தூக்கத்தை பெற உதவும். இதைப் பற்றி மேலும் அறிய பதிவை தொடர்ந்து படிக்கவும்.
ஆழ்ந்த தூக்கத்தை பெற பிஸ்தா எவ்வாறு உதவும்? இது குறித்த தகவல்களை ஆயுர்வேத நிபுணர் தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நமது தூக்கம் விழிப்பு சுழற்ச்சியை கட்டுப்படுத்துவதில் மெலடோனின் எனும் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற உலர் பழங்களை காட்டிலும் பிஸ்தாவில் அதிக மெலடோனின் உள்ளது. இந்த ஹார்மோன் வெளியிடப்படும் போது, அது தூங்குவதற்கான நேரம் என்று மூளைக்கு செய்தி அனுப்புகிறது.
இந்த பதிவும் உதவலாம்:நீங்கள் அறிந்திடாத சுக்கின் ஆரோக்கிய நன்மைகள்
விரைவில் தூக்கம் வர, நீண்ட நேரம் தூங்க மெலடோனின் உதவுகிறது. இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. உடல், மன ஆரோக்கியம் மற்றும் ஆட்டோ இம்யூன் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு நல்ல தூக்கம் அவசியமானது.
மேலும் பிஸ்தாக்களை சாப்பிடுவதன் மூலம் மெக்னீசியம், வைட்டமின் B6 போன்ற ஊட்டச்சத்துக்களையும் பெறலாம் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள மெக்னீசியம் விரைவில் தூங்குவதற்கு மட்டுமின்றி, ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் உதவுகிறது. மேலும், டிரிப்டோபான் மற்றும் செரோடோனின் வெளியீடுக்கு வைட்டமின் B6 முக்கியமாக தேவைப்படுகிறது. இவை நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும், மனநிலையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆயுர்வேதத்தின் படி, பிஸ்தா வெப்பமான விளைவை கொண்டுள்ளது. பிஸ்தா கவலை, தூக்கமின்மை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது. இது தூக்கத்தை மேம்படுத்துகிறது. பிஸ்தா சாப்பிடுவது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரு தீவிர நோயின் அறிகுறியா !
வயது கூடும் பொழுது உடலில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி குறையலாம். இது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து விடுபட பிஸ்தா உதவும். இதனுடன் பிஸ்தாவில் பின்வரும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
மேற்கூறிய ஊட்டச்சத்துக்கள் யாவும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயிக்கின்றன.
இந்த நன்மைகள் அனைத்தும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும்.
எனவே இரவில் தூக்கம் இன்மை அல்லது நல்ல தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்கள், மெக்னீசியம் மற்றும் மெலடோனின் மாத்திரைகளுக்கு பதிலாக தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தாவை சாப்பிடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com