பொதுவாக சமையலுக்கு ஃபிரஷ்ஷான இஞ்சியை பயன்படுத்துகிறோம். இதன் ஆரோக்கிய நன்மைகள் நாம் அனைவரும் அறிந்ததே. தொண்டை கரகரப்பு, சளி அல்லது தலைவலியில் இருந்து நிவாரணம் பெற துருவிய இஞ்சியை டீ அல்லது கஷாயத்தில் சேர்த்து குடிக்கலாம். இத்தகைய நற்பண்புகள் உள்ள இஞ்சியை விட சுக்கு ஆரோக்கியமானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
நம் சமையலறையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் சுக்கில் அற்புதமான நன்மைகள் உள்ளன. இஞ்சியை உலர வைத்து சுக்கு தயாரிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய இந்த சுக்கின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினசரி சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
செரிமானத்தை மேம்படுத்தும்
உலர்ந்த இஞ்சி அல்லது சுக்கு செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அஜீரணம் அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சுக்கு தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நடுநிலைப்படுத்த உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
எந்த ஒரு தொற்று நோயையும் எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் நோய் வாய்ப்பாடுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும்
நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்தே மாதவிடாய் வலியை சுலபமாக போக்கலாம். அவற்றில் சக்கும் ஒன்று. சுக்கில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும்.
சளி மற்றும் இருமலை சரி செய்யும்
சளி அல்லது இருமல் இருக்கும் சமயத்தில் இஞ்சி டீ குடிப்பது இதமாக இருக்கும். ஆனால் சளி மற்றும் இருமலுக்கு சுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சுக்கின் முழு நன்மைகளையும் பெற அதில் கஷாயம் செய்து குடிக்கலாம். மேலும் இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியையும் கலந்து குடிக்கலாம்.
எடை இழப்பு
சுக்கு செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி உடலில் தேங்கியுள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்துவதன் மூலம் கொழுப்பு உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க எப்படி டீ குடிக்க வேண்டும் தெரியுமா?
குறிப்பு
சுக்கு ஒரு சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். இது சில ஒவ்வாமை எதிர்வினைகளையும் கொண்டிருக்கலாம். ஆகையால் அதை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik