herzindagi
image

மசாலா பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா? இதை நோட் பண்ணுங்க மக்களே

ஏலக்காயில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஏலக்காயில் மறைந்திருக்கக் கூடிய பல நன்மைகளை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-10-02, 10:26 IST

நமது சமையலறையில் மசாலா பொருட்களில் ஒன்றாக கருதப்படும் ஏலக்காய், அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர பல்வேறு விதமான பல்வேறு நன்மைகளும் ஏலக்காய் மூலம் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க

 

இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் ஏலக்காய் மூலம் கிடைக்கப் பெறும் மருத்துவ குணங்கள் குறித்து தற்போது காணலாம்.

 

புத்துணர்ச்சியான சுவாசம்:

 

ஏலக்காய் விதைகளை மெல்லுவது வாய் துர்நாற்றத்தை இயற்கையாகவே நீக்கி, புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கிறது. இது வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

 

அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

 

ஏலக்காய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மூட்டுவலி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களின் அறிகுறிகளை நீக்கவும் இது உதவக்கூடும்.

cardamom uses

 

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது:

 

ஏலக்காய், இரத்தத்தை மெலிதாக்கும் ஒரு இயற்கையான காரணியாக செயல்பட்டு, சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது இரத்த கட்டிகளை தடுக்கவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

 

நச்சுகளை வெளியேற்றுகிறது:

 

ஏலக்காய், சிறுநீரின் ஓட்டத்தை அதிகரித்து, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால், சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

மேலும் படிக்க: Benefits of black raisins: வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

 

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:

 

தொடர்ந்து ஏலக்காய் சாப்பிடுவது இரத்த அழுத்த அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அது தொடர்புடைய இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.

 

ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள்:

 

ஏலக்காயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. இது புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

cardamom benefits

 

மன ஆரோக்கியம்:

பாரம்பரிய மருத்துவத்தில், மன தெளிவை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது மனதை அமைதிப்படுத்துவதாகவும், மனநிலையை மேம்படுத்துவதாகவும், பதற்றத்தைக் குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.

 

நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு:

 

ஏலக்காயில் உள்ள எண்ணெய்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com