herzindagi
period tips big

menstrual hygiene: மாதவிடாயின்போது பெண்கள் இவற்றை எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!

mathavidai: மாதவிடாய் காலங்களில் உடல் பிரச்சனைகள் இருப்பது சகஜம். ஆனால் சில விஷயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2022-12-03, 10:45 IST

வயதுக்கு வந்த பின்பு பெண்கள் மாதவிடாய் நாட்களை சந்திக்க தொடங்குகிறார்கள். இந்த நேரத்தில் சுகாதாரத்தில் மட்டும் சில பெண்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். நீங்களும் அப்படி தான் எனில், இந்த பதிவு உங்களுக்கானது தான். இந்த நாட்களில் உங்கள் முழு உடலின் மீதும் அக்கறை காட்டி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்த பதிவில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி தான் நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம். மாதவிடாய் குறித்த முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த பதிவை கட்டாயம் படியுங்கள். இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை முடிந்தவரை பின்பற்றுங்கள்.

நாப்கின்களை மாற்றாமல் இருப்பது

period tips

மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தினால், எவ்வளவு நேர இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளவும். இது மிகவும் பொதுவான கேள்வி என்றாலும், இன்றும் இது குறித்து நிறைய குழப்பங்கள் பல பெண்களுக்கு உள்ளன. நாப்கின்களை சரியான நேர இடைவெளியில் மாற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

அதனால் தான் சரியான நேரத்தில் நாப்கின்களை மாற்ற வேண்டும். ஒரு நாப்கின்னை 4 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. நாப்கின் நீண்ட நேரம் ரத்தத்தை உறிஞ்சாது. அதனால் தான் சிறிது நேரம் கழித்து நாப்கின் கிழிய தொடங்குகிறது. எனவே நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும். ரத்தம் வெளியேறுவதை பொறுத்து ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை நப்கின்களை மாற்றுவது நல்லது.

உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள்

period tips

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை தருகிறது. இதுப்போன்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கிறீர்களா? கண்டிப்பாக அது தவறான விஷயம். உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அதோடு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியையும் குறைக்கும். அதே சமயம் லேசான பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும். இந்த நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பத்ராசனம், பாலாசனம் மற்றும் உத்தான சிஷோசாசனம் போன்ற ஆசனங்களை செய்யலாம். இந்த ஆசனம் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவும்.

உப்பை உண்ணாதீர்கள்

period tips

மாதவிடாய் காலங்களில் வயிறு உப்புசம் ஒரு பிரச்சனையாகவே மாறும். அதனால் தான் வயிறு உப்புசத்தை அதிகரிக்க கூடிய விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதிகமான உப்பு, உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் காலத்தில் உப்பை உட்கொண்டால் பிரச்சனை அதிகமாகலாம். எனவே இந்த நேரங்களில் அதிக உப்புள்ள உணவுகளை உண்ண வேண்டாம்.

காலை உணவை தவிர்த்தல்

period tips

மாதவிடாய் காலத்தில் நம் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறும். அதனால் இந்த நேரத்தில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com