herzindagi
image

Work From Home: ஒர்க் ப்ரம் ஹோமில் நீண்ட நேரம் லேப்டாப்பில் வேலையா? கழுத்து வலியைப் போக்க செய்ய வேண்டியது!

வீட்டில் இருந்தே 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து லேப்டாப்பில் பணிபுரியும் போது கழுத்து வலி பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். இவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் உங்களது வாழ்க்கை முறையில் தினமும் சில ஆசனங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-17, 14:33 IST

தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பெரும்பாலானார் கொரானாவிற்குப் பிறகு வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தனர். தற்போது பெரும்பாலான துறையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் ஹைட்பிரிட் முறையில் வீடு மற்றும் அலுவலகம் என மாறி மாறி பணியாற்றிவருகின்றனர். அலுவலகம் சென்றாலே கூட குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குப் பின்னதாக வீட்டிற்கு வந்துவிடலாம். ஆனால் ஒர்க் ப்ரம் ஹோம் அப்படியில்லை. அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிகள் எப்போது சொன்னாலும் சில வேலைகளைச் செய்தாக வேண்டும. இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது முதுகு வலி மற்றும் கழுத்து வலி போன்றவற்றைச் சந்திக்க நேரிடும். இந்த நிலையில் நீங்களும் இருக்கிறீர்களா? அப்படியென்றால் கழுத்து வலியைக் குணமாக்க வீட்டில் இருந்த படியே சில யோகாசனங்களை மேற்கொள்ளவும்.

 

பச்சிமோத்தானாசனம்:

நம்மில் பலரும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆசனங்களில் ஒன்றாக உள்ளது பச்சிமோத்தானாசனம். தரையில் அமர்ந்தபடி கால்களை நீட்டி செய்யக்கூடிய இந்த ஆசனத்தின் போது நரம்பு மண்டலத்தை சீராக செயல்படுத்துவதோடு கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியை நீக்க உதவியாக இருக்கும்.

 

 

புஜங்காசனம்:

கழுத்து வலிமைப் பெறுவதோடு உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சீராக செயல்படுவதற்கு உதவியாக உள்ள ஆசனங்களில் ஒன்றாக உள்ளது புஜங்காசனம். பாம்பு படமெடுப்பது போல் உடல் வளைந்து முகம் நேராக இருப்பது போன்று செய்யக்கூடிய இந்த ஆசனத்தில் உடலின் ஒவ்வொரு பகுதியும் செயல்படுகிறது. இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது மார்பகங்கள் விரிவடைந்து, பின்பக்கம் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய வலியை நீக்க புஜங்காசனம் உதவியாக உள்ளது. நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றக்கூடிய நபர்கள் இந்த ஆசனத்தைத் தொடர்ச்சியாக செய்யவும். இதனால் கழுத்து வலி பிரச்சனைகளுக்குக் குட் பை சொல்லலாம்.

மேலும் படிக்க: Winter Season Food: குளிர்காலத்தில் வைரஸ் காய்ச்சலைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்?

சர்பாசனம்:

கழுத்து வலிக்கு நிவாரணம் தரக்கூடிய ஆசனங்களில் ஒன்றாக உள்ளது சர்பாசனம். குப்புறப்படுத்துக் கொண்டு வயிறு தரையைத் தொடும்படியும், உள்ளங்கைகளை முதுகுப் பின்னால் சேர்த்து இணைத்துக் கொண்டு தலை, மார்பு மற்றும் தோள்பட்டை உயர்த்தி செய்யக்கூடிய ஆசனம் தான் சர்பாசனம். இந்த ஆசனத்தை செய்யும் போது கால்கள் தரையில் படும் படி இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. 8-10 நிமிடங்கள் மேற்கொண்டாலே போதும். உடல் முழுவதும் இருக்கும் வலியைப் போக்குவதோடு கழுத்து வலி பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு உதவியாக உள்ளது.

மேலும் படிக்க: Gut Friendly Foods: குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய உணவுகள் இதோ

பாலாசனம்:

நாம் அனைவரும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆசனம் தான் பாலாசனம். கட்டிலில் படுத்துக் கொண்டே இந்த ஆசனத்தை செய்ய முடியும். குழந்தைகள் குப்புறப்படுத்திருப்பது போன்று செய்யக்கூடிய ஆசனத்தில் கழுத்து, தோள்பட்டை, முதுகுத்தண்டு பகுதிகளில் அழுத்தம் ஏற்பட செய்யுமாறு அமையும். இந்த ஆசனத்தைத் தொடர்ச்சியாக செய்யும் போது நாள்பட்ட கழுத்து வலியைக் குணப்படுத்த முடியும்.

 

 

மர்ஜாரியாசனா:

உடலை கச்சிதமாகவும், கழுத்து வலி பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆசனங்களில் ஒன்றாக உள்ளது மர்ஜாரியாசனா. cat cow pose என்றழைக்கப்படும் மர்ஜாரியாசனா முதுகு வளைந்து செய்யும் ஆசனமாகும். இவற்றைத் தொடர்ச்சியாக செய்யும் போது கழுத்து வலியை எளிதில் நீக்க முடியும்.

Image source - Freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com