Sardine fish benefits: மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. அதனால் பல விதமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அவை, இருதய நோய்களின் அபாயத்தை குறைப்பது முதல் பல்வேறு பயன்களை அளிக்கின்றன. மத்தி மீனில் வைட்டமின்களும், கால்சியம் மற்றும் புரதமும் நிறைந்துள்ளன.
மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
ஆனால் இதில் உப்பு, கலோரிகள் மற்றும் ப்யூரின்கள் அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்றதல்ல. எனினும், மற்றவர்களின் ஆரோக்கியத்தை மத்தி மீன் மேம்படுத்துகிறது. அதனடிப்படையில், மத்தி மீனில் இருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை இதில் பார்க்கலாம்.
மத்தி மீனில் அதிக அளவு ஒமேகா-3 இருப்பதால், இது இருதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமான உணவு. ஒமேகா-3, இருதய நோய்கள் காரணமாக ஏற்படும் இறப்புகளை குறைத்து, இருதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், ஒமேகா-3, இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தத்தில் அதிக அளவு ட்ரைகிளிசரைடு இருப்பது, இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
ஒமேகா-3 நிறைந்த மற்ற மீன்களை போலவே, மத்தி மீனும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக மீன் சாப்பிடும் போது, கர்ப்பம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வது நினைவாற்றல், கற்றல், அறிவாற்றல் மற்றும் மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Papaya leaf benefits: நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்; செரிமான மண்டலத்தை சீராக்கும்; பப்பாளி இலைகளின் மருத்துவ குணங்கள்
மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன்களில் இருந்து பெறப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், வயது தொடர்பான கண் நோய்களான மாகுலர் சிதைவு மற்றும் கிளைகோமா போன்றவற்றின் அபாயத்தை குறைக்க உதவும். இது தவிர கண் வறட்சி, அரிப்பு, ஒளி உணர்திறன் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை போக்க உதவுகிறது என கூறப்படுகிறது.
மத்தி மீனில் புரதம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கால்சியம் உறிந்து கொள்ளப்படுவதற்கும், ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கும் தேவையான வைட்டமின் டி இதில் உள்ளது. மேலும் மத்தி மீன், எலும்பின் அடர்த்தியை ஆரோக்கியமாக பராமரிக்கிறது.
இதில் காணப்படும் புரதம், தசைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இது உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் தேவையான முக்கிய சத்து ஆகும். இந்த புரதம் அமினோ அமிலங்களாக மாறி தசை வளர்ச்சியை தூண்டுவது மட்டும்மல்லாமல், பாதிக்கப்பட்ட தசைகளை குணப்படுத்துகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com