Pinky Face: இளஞ்சிவப்பு நிறத்தில் சருமம் மாறனுமா... இந்த ஜூஸை குடித்தாலே போதுமானது

சருமத்தில் இயற்கையான இளஞ்சிவப்பு பிரகாசம் வேண்டுமா?. கவலை வேண்டாம் சருமத்திற்கு மாயாஜாலப் பொலிவைத் தரக்கூடிய ஒரு ஜூஸ் பற்றி பார்க்கலாம்

pink face big image
pink face big image

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாகும். இதற்காக பெண்கள் சருமப் பராமரிப்பை அதிகம் மேற்கொள்கின்றனர். அதற்காக அவர்கள் சந்தையில் கிடைக்கும் ஃபேஸ் பேக்குகள் முதல் ஸ்க்ரப்கள் வரை எல்லாவற்றையும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பளபளப்பானது சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கிறது அவை நிரந்தர தீர்வை கொடுப்பதில்லை. சந்தையில் விற்கும் பொருட்களை பயன்படும் கொஞ்ச நாட்கள் நீடிக்கும் அதன்பிறகு மீண்டும் சருமம் மங்கிவிடும். உங்கள் பளபளப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமெனில் உணவில் சில சிறப்பு வகை ஜூஸ்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரோஸி பளபளப்பிற்கு மாதுளை மற்றும் ஸ்ட்ராபெரி ஜூஸ் குடிக்கலாம். அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ரோஸி பளபளப்புக்கு மாதுளை-ஸ்ட்ராபெரி சாறு குடிக்கவும்

pomegranate inside

மாதுளை மற்றும் ஸ்ட்ராபெரி இரண்டிலும் வைட்டமின் சி உள்ளதால் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தின் தன்மையை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் அவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால் சருமத்திற்குப் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது. மாதுளை-ஸ்ட்ராபெரி ஜூஸ் குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படும். இது சருமத்திற்கு ஆக்ஸிஜனை சரியாக வழங்குவதோடு சருமத்தையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த ஜூஸ் நீரேற்றமாக உடலை வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக சருமத்தில் இயற்கையான ஈரப்பதம் இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி-மாதுளை ஜூஸ் செய்யத் தேவையான பொருள்கள்

  • இரண்டு மாதுளை
  • 5 முதல் 7 புதிய ஸ்ட்ராபெர்ரிகள்
  • தேன் ஒரு ஸ்பூன்
  • கருப்பு உப்பு
  • சீரக தூள்
  • அரை எலுமிச்சை சாறு

செய்முறை

strawberry inside

  • மாதுளை விதைகளை உரித்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.
  • அவற்றை ஒரு பிளெண்டரில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் உருவாகும் வரை அரைக்கவும்.
  • ஒரு வடிகட்டியின் உதவியுடன் தோலை அகற்றி, ஒரு கண்ணாடி கிளாஸில் சாற்றைப் பிரித்தெடுக்கவும்.
  • இப்போது அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், கருப்பு உப்பு மற்றும் சீரக தூள் சேர்க்கவும்.
  • அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து குடித்து வரலாம்.

மேலும் படிக்க: வேர்க்குருவை ஓட ஓட விரட்ட இந்த சிம்பிள் வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP