herzindagi
fat  big image

Weight Loss Juice: 35 வயது பெண்கள் சிரமப்படாமல் உடல் எடையை குறைக்க இந்த ஜூஸை குடித்தால் போதும்!!

வயதுக்கு ஏற்ப பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். 35 வயதிற்குப் பிறகு வயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு சேரத் தொடங்குகிறது அதைக் குறைப்பது கடினம்
Editorial
Updated:- 2024-04-24, 19:04 IST

பெண்களின் உடலில் வெவ்வேறு வயது நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மனநிலை, செரிமானம், தோற்றம் மற்றும் எடை கூட பாதிக்கிறது. மாதவிடாய், கர்ப்பம், பிரசவத்திற்குப் பிந்தைய மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் ஹார்மோன்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். பல நேரங்களில் 35 வயதிற்குப் பிறகு பெண்களின் வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது. அதைக் குறைப்பதும் கடினமாக விஷயமாக இருக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக இது நிகழ்கிறது. நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் இந்த ஆரோக்கியமான பானம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சரி செய்யவும், பிடிவாதமான தொப்பையை குறைக்கவும் உதவும். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்துள்ளார். மன்பிரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க: ஒரு சிட்டிகை இந்த பவுடரை தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் அறவே போய்விடும்

பானம் தயாரிக்க பாகற்காய் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது 

bitter gourd inside

  • பாகற்காய் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் செல்கள் குளுக்கோஸை நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
  • பாகற்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
  • இது உடலின் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
  • எலுமிச்சை உடலில் சேரும் நச்சுக்களை நீக்குகிறது.

தேவையான பொருள்கள் 

  • பாகற்காய் - 1
  • தண்ணீர் - 30 மிலி
  • எலுமிச்சை - பாதி

செய்முறை

lemon inside

  • பாகற்காயை நன்கு தோலுரித்து அதன் விதைகளை நீக்கவும்.
  • அதன்பிறகு அதை அரைத்து சாறு எடுக்கவும்.
  • 1 தேக்கரண்டி சாறு 30 மிலி தண்ணீரில் கலக்கவும்.
  • நீங்கள் விரும்பினால் தண்ணீரின் அளவை சிறிது அதிகரிக்கலாம்.
  • அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழியவும்.
  • உங்கள் ஆரோக்கியமான பானம் தயார்.

மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்தம் முதல் பல நோய்களை குணப்படுத்த உதவும் பச்சை நிற பழங்கள்

நீங்கள் எந்த நேரத்திலும் இதை குடிக்கலாம், ஆனால் காலையில் குடிப்பது அதிக நன்மை பயக்கும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தொப்பை மற்றும் ஹார்மோன் சமநிலையை குறைக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிக்க வேண்டும். 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com