நம்முடைய சருமம் பார்ப்பதற்கு எப்போதும் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். இதற்காக பல்வேறு க்ரீம்கள், சீரம்கள், டோனர் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆனால், ஆரோக்கியமான சருமம் என்பது இத்தகைய க்ரீம்களை மட்டுமே சார்ந்தது இல்லை.
உணவு முறை தான் சரும பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதிலும் பழங்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துகள் நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அதனடிப்படையில், சரும பராமரிப்பிற்கு உதவியாக இருக்கும் பழங்கள் மற்றும் அதில் இருந்து கிடைக்கக் கூடிய பலன்களை தற்போது காண்போம்.
பப்பாளி:
இந்த வரிசையில் முதன்மையான இடத்தை பப்பாளி பழம் பெறுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள் சி, ஏ, பப்பைன் மற்றும் இயற்கை நொதிகள் போன்றவை சருமத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்க உதவுகின்றன. மேலும், சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டத்தை அளிக்கிறது. மேலும், இதன் அன்டிஆக்சிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி, முதுமையான தோற்றத்தை தடுக்கின்றன. தொடர்ச்சியாக பப்பாளி பழத்தை சாப்பிடும் போது சருமத்தில் இருக்கும் பருக்களின் வடுக்கள் மறையும் என்று கூறப்படுகிறது. மேலும், சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றும் ஆற்றல் பப்பாளியில் இருக்கிறது.
மாதுளை:
மாதுளை பழங்கள் பார்ப்பதற்கு மட்டும் அழகு நிறைந்தவை கிடையாது. இவை சரும பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கின்றன. இதில் பாலிஃபீனால்கள், வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இவை இரண்டும் கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன. இது சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. இதில் உள்ள அன்டிஆக்சிடென்ட்கள் முகத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கின்றன. குறிப்பாக, கிரீன் டீயில் இருப்பதை விட மாதுளை பழச்சாறில் அதிகமான அன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: https://www.herzindagi.com/tamil/beauty/oiling-only-dont-boost-your-hair-growth-follow-these-complete-routine-article-1039824
அவகேடோ:
இதனை தமிழில் வெண்ணெய் பழம் என்று அழைக்கின்றனர். மற்ற பழங்களை விட இதன் சுவை சற்று வித்தியாசமாக இருந்தாலும், இது சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் ஒமேகா 9, ஒமேகா 3, வைட்டமின்கள் பி, ஈ போன்றவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. இதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கிறது. அதன்படி, அவகேடோ பழத்துடன் தேன் மற்றும் பாதாம் கலந்து ஸ்மூத்தியாக குடிப்பது சுவை மட்டுமின்றி சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
ஆரஞ்சு:
இந்தப் பட்டியல் ஆரஞ்சு பழம் இன்றி முழுமை பெறாது என்று கூறலாம். இதில் இருக்கும் வைட்டமின் சி, கொலஜன் உற்பத்திக்கு தூண்டுகோலாக அமைகிறது. இது சருமத்தில் நெகிழ்வுத் தன்மையை தக்கவைக்கிறது. இது நச்சுகளை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது. இதில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் முகப்பொலிவை கொடுக்கிறது.
பெர்ரி பழங்கள்:
மேலும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி ஆகிய பழங்களும் சருமத்திற்கு தேவையான சத்துகளை கொடுக்கின்றன. இதில் அன்டிஆக்சிடென்ட்கள், அந்தோசைனின்கள் மட்டுமின்றி நார்ச்சத்தும் உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக்கி குடல் ஆரோக்கியமாக இயங்குவதை உறுதி செய்கிறது. சருமத்தின் நலன் பெருமளவு குடல் ஆரோக்கியத்தை சார்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில், இந்தப் பழங்களை அன்றாடம் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இயற்கையான முறையில் நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation