herzindagi
image

Kalpasi Health Benefits: நீங்கள் அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கு கல்பாசி

இந்திய மசாலா வகைகளில் கல்பாசியும் ஒரு தனி இடம் பிடித்திருக்கிறது. கல்பாசி சுவைக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
Editorial
Updated:- 2024-12-22, 08:00 IST

கல்பாசி சுவைக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. கல்பாசி பார்க்கப் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் மசாலா. இது உலர்ந்தது மற்றும் வலுவான மண் வாசனை கொண்டது. இமாச்சலப்பிரதேசம் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை பல்வேறு இடங்களில் கல்பாசி வளர்க்கப்படுகின்றன. இது ஒரு உண்ணக்கூடிய பூஞ்சை வகையை சார்ந்தது, இது மரங்கள் மற்றும் பாறைகளில் வளரக்கூடியது. பல அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் இல்லை என்றாலும், பண்டைய பாரம்பரிய குணப்படுத்துபவர்கள் அதை பயன்படுத்தி பலன் அடைந்திருக்கிறார்கள். 

 

மேலும் படிக்க: முட்கள் செடிக்குள் சிவந்து பழுத்திருக்கும் சப்பாத்திக்கள்ளி பழம், உடல் ஆரோக்கியத்திற்கு வர பிரசாதமாம்

கல்பாசியின் நன்மைகள்

 

கல்பாசி ஆரோக்கிய நன்மைகளுக்கும் மற்றும் சமையல் பொருட்கள் இரண்டிலும் சிறந்த முறையிக் கையாலும் தன்மை கொண்ட பொருளாகும். அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

 

வீக்கத்தைக் குறைக்கிறது

 

கல்பாசியில் இயற்கையாகவே இருக்கக்கூடிய அத்தியாவசிய எண்ணெய் தசை வலிகள், மூட்டு வலிகள், சுளுக்கு போன்ற பல்வேறு நிலைகளால் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது. அவை செயலில் உள்ள கூறுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் வலிக்கு உதவுகின்றன.

Untitled design (6)

Image Credit: Freepik


சிறுநீரக கற்கள் பிரச்சனையைச் சரிசெய்கிறது

 

பாரம்பரிய மருத்துவர்கள் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையாக்க கல்பாசியை பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் இருக்கும் ஆண்டிபயாடிக் சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

 

செரிமானத்தை மேம்படுத்துகிறது

 

கல்பாசி செரிமான நொதிகளைத் தூண்ட செய்கிறது. இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, அதிகப்படியான வாய்வு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இது ஒட்டுமொத்த செரிமான செயல்முறையையும் எளிதாக ஒழுங்குபடுத்துகிறது.

bloating stomach

Image Credit: Freepik

இதய பிரச்சனை குறைக்க உதவும்

 

மசாலா உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது உங்கள் இதயத்தின் அழுத்தத்தை குறைக்கிறது.

 

தோல் பிரச்சனையைத் தீர்க்கும்

 

கல்பாசி நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது . அரிப்பு, தோலின் நிறமி போன்ற தோல் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

oily face

Image Credit: Freepik

 

காயங்களை ஆற்றும்

 

கல்பாசியில் உள்ள துவர்ப்பு பண்புகள் காயங்களை முன்கூட்டியே குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. சிகிச்சையின் ஒரு பகுதியாக காயத்தின் மீது பேஸ்டாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

இருமல் மற்றும் ஆஸ்துமா குணப்படுத்தும்

 

கல்பாசி பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக உடலில் ஏற்படும் தேவையற்ற பாக்டீரியாவைக் கொன்று, உணவில் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது. பல தொற்றுநோய்களிலிருந்து தடுக்கக்கூடிய உணவாக செயல்படுகிறது.

cold inside (1)

 Image Credit: Freepik


கல்பாசியில் இருக்கு சில பக்க விளைவுகள்

 

கல்பாசி பலவிதமான நன்மைகளை வழங்கினாலும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில பக்க விளைவுகளும் உள்ளன:

  • அதிக உணர்திறன் பிரச்சினைகள் உள்ள நபர்கள் ஒவ்வாமை எதிர்வினைகளை அனுபவிக்கலாம். உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் சொறி ஏற்படலாம், ஒரு குறிப்பிட்ட எதிர்வினை இருந்தால் மருத்துவரை அணுகவும்.
  • பாலூட்டும் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் படிக்க: உடல் ஆரோக்கியம், முடி பிரச்சனைக்குத் தீர்வு காணும் திறமை கொண்ட கறிவேப்பிலை பற்றி பார்ப்போம்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com