herzindagi
image

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இதில் பார்க்கலாம். இது பல வகைகளில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Editorial
Updated:- 2025-11-10, 10:31 IST

வாழைப்பழம் சுவையை மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த உடல்நலனுக்கும், மனநலனுக்கும் பல்வேறு வழிகளில் உதவுகிறது. இது உடல் எடை முதல் மனநிலையை மேம்படுத்துவது வரை பல விஷயங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. அதன்படி, தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை காண்போம்.

மேலும் படிக்க: Karuppu kavuni rice benefits: தினசரி உணவில் கருப்பு கவுனி அரிசி சேர்ப்பதால் பெறும் நன்மைகள்

 

உடனடி ஆற்றலை அதிகரிக்கும்:

 

வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். எனவே, உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்த தேர்வாகும். இது உங்கள் உடலுக்கு தேவையான சக்தியை உடனடியாக வழங்கும்.

Uses of banana

 

இருதய ஆரோக்கியத்திற்கு உதவும்:

 

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்து, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

 

செரிமானத்திற்கு உதவும்:

 

இதில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தடுக்கவும் உதவும்.

மேலும் படிக்க: Sardine fish benefits: கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; எலும்புகளை வலுவாக்கும்; மத்தி மீனின் நன்மைகள்

 

மனநிலையை மேம்படுத்தும்:

 

வாழைப்பழத்தில் டிரிப்டோபன் (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், உங்கள் மனநிலை மேம்படும்; மன அழுத்தம் குறையும்.

 

உடல் எடையை நிர்வகிக்க உதவும்:

 

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழம், நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும். இதனால், தேவையில்லாத சிற்றுண்டிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படும். இது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

Benefits of banana

 

நல்ல தூக்கத்திற்கு உதவும்:

 

வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்துகள் தசைகளை ரிலாக்ஸ் செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை முயற்சி செய்யலாம்.

 

சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது:

 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த வாழைப்பழம், சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், இது முடி உதிர்வை குறைக்கவும் உதவக்கூடும்.

 

எனவே, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக இது இருக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com