
துளசி செடியானது பல வீடுகளில் புனிதமானதாகவும், ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், முறையான பராமரிப்பின்மை அல்லது கவனக்குறைவால், அதன் இலைகள் காய்ந்து போக வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் துளசி செடி காய்ந்து போயிருந்தால், கவலைப்பட தேவையில்லை. சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் அவற்றை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். அவற்றை இதில் காண்போம்.
துளசி செடிக்கு தினமும் குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி தேவை. தொடர்ந்து நிழலிலேயே இருந்தால், அது சீக்கிரம் வாடிவிடும். செடியை அதிகபட்சம் காலை வெயில் படும் இடத்தில் வைப்பது சிறந்தது. ஏனெனில், கடுமையான சூரிய ஒளி அதன் இலைகளை கருகச் செய்து விடும்.

மேலும் படிக்க: மாதுளை வளர்ப்பு: வீட்டிலேயே ஆரோக்கியமான பழங்களை அறுவடை செய்வது எப்படி?
நீர் ஊற்றுவதில் அளவோடு இருப்பது நல்லது. துளசிக்கு தினமும் மிதமான அளவில் நீர் ஊற்றினால் போதும். அளவுக்கு அதிகமாக நீர் ஊற்றுவது வேர் அழுகலுக்கு வழிவகுத்து, செடியை வாடச் செய்துவிடும். மண், லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஆனால், நீர் தேங்கி நிற்கக் கூடாது. மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில், இன்னும் கவனத்துடன் நீர் ஊற்ற வேண்டும்.
மேலும் படிக்க: குறைந்த இடத்தில் அதிக மகசூல்; மாடித் தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பதற்கான எளிய குறிப்புகள்
உங்கள் துளசி செடி வாடிப் போவதற்கு மண்ணின் தரம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். துளசி செடியானது தளர்வான, நன்றாக நீர் வடியும், கரிம உரம் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும். மாட்டுச் சாண உரம் அல்லது மண்புழு உரம் ஆகியவற்றை கலப்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை நிரப்பி, புதிய இலைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். புத்துணர்ச்சியை ஊக்குவிக்க, மஞ்சள் அல்லது காய்ந்த இலைகளை தொடர்ந்து நீக்குங்கள்.

செடிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். இவை வேர்கள் மற்றும் இலைகளை சேதப்படுத்தலாம். செடியில் வேப்ப எண்ணெய் போன்ற இயற்கையான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். இது செடிக்கு தீங்கு விளைவிக்காமல் பூச்சிகளை விரட்டி விடும்.
துளசி ஒரு மென்மையான செடி என்பதால், தொடர்ச்சியான கவனிப்பு அதற்கு பலனளிக்கும். தினமும் காலையில் நீர் ஊற்றுவது, நல்ல வெளிச்சம், காற்று வீசும் இடத்தில் வைப்பது ஆகியவை உங்கள் துளசி செடியை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com