
மூலிகைகள் என்றாலே வனப்பகுதிகளில் மட்டுமே இருக்கக் கூடியது என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், நம்முடைய வீட்டிலேயே எளிமையான முறையில் சில மூலிகைகளை நாம் வளர்க்கலாம். ஏனெனில், இவற்றின் பராமரிப்பு சுலபமாக இருக்கும்.
இவ்வாறு வீட்டில் சில மூலிகைகளை வளர்ப்பதன் மூலம் நமக்கு தேவையான போது மருத்துவ ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அன்றாட சமையலுக்கும் இந்த மூலிகைகள் உதவுகின்றன.
நம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலை செடியை (Bay Leaf Plant) வீட்டிலேயே வளர்க்கலாம். லாரல் மரத்திலிருந்து வரும் இந்த பச்சை இலைகள், உங்கள் சமையலுக்கு சுவை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ பலன்களையும் தருகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், பூச்சிகளை விரட்டும் ஒரு பணியை இது செய்கிறது.
கொத்தமல்லி இலைகள் இல்லாமல் நம் உணவுகள் நிறைவடைவதில்லை. மிதமான வெப்பத்தில் வளரும் இந்த மென்மையான பச்சை மூலிகை, சமையலுக்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது. இது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும், அதன் நறுமணம் மனதிற்கு அமைதியை அளிக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் படிக்க: வீட்டிலேயே கொய்யா வளர்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
இது உயரமாகவும், நறுமணம் வீசக்கூடியதாகவும் வளரும் தன்மை கொண்டது. இதன் சிட்ரஸ் சுவை தேநீர் மற்றும் உணவுகளில் புதிய தன்மையை கொடுக்கும். இதனை மூலிகை சாறாக எடுத்துக் கொள்ளும் போது, உடல் வலிகளையும், அசௌகரியங்களையும் நீக்க உதவும்.
மேலும் படிக்க: சுவை மற்றும் சத்து மிகுந்த சுரைக்காய்; உங்கள் வீட்டு தோட்டத்திலேயே சுலபமாக வளர்க்கலாம்
வீடுகளில் மிகவும் எளிதாக காணப்படும் தாவரங்களில் கற்றாழை முதன்மையானது. நன்கு வடிகால் வசதி கொண்ட மண்ணில், சூரிய ஒளியின் கீழ் கற்றாழை நன்றாக வளரும். இது வீக்கத்தைக் குறைக்கிறது. வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் அரிப்புகளை குணப்படுத்துவதில் மிகவும் பலனளிக்கிறது. இதன் ஜெல், சரும பராமரிப்புக்கு பிரதானமானது.

எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்ட ஒரு தொன்மையான மூலிகையாக துளசி திகழ்கிறது. ஆன்மிக பயன்பாடுகளுடன், இது ஒரு வலிமையான சிகிச்சை தாவரமாகும். இது செரிமானமின்மை, தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினமும் காலையில் துளசி இலைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த எளிய மூலிகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம், நீங்கள் சமையலுக்கு தேவையான ஃப்ரெஷ்ஷான பொருட்களை பெறுவதுடன், ஆரோக்கியத்தையும், இயற்கையான நிவாரணத்தையும் எளிதில் பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com