
மயக்கும் நறுமணத்துடனும், மென்மையான வெள்ளை மலர்களுடன் கூடிய மல்லிகைப் பூ, பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். சரியான கவனிப்பு இருந்தால் தொட்டியில் கூட மல்லிகையை எளிதாக வளர்க்கலாம். உங்கள் வீட்டில் பசுமையான, வாசனை நிறைந்த மல்லிகை பூச்செடியை வளர்க்க உதவும் குறிப்புகளை காண்போம்.
சரியான தொட்டியை தேர்வு செய்யவும்:
நல்ல வடிகால் துளைகள் கொண்ட, குறைந்தது 12 முதல் 14 அங்குல ஆழமுள்ள தொட்டியை பயன்படுத்துங்கள். வேர்கள் தண்ணீரில் தேங்கி நிற்பது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தொட்டியில் வடிகால் வசதி மிக முக்கியம். தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு அடுக்கு சரளை கற்களை சேர்ப்பது நீர் தேங்குவதை தடுக்க உதவும்.

மேலும் படிக்க: வீட்டிலேயே கொய்யா வளர்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
மல்லிகைக்கு சற்று அமிலத்தன்மை கொண்ட, வளமான மண் மிகவும் ஏற்றதாக இருக்கும். தோட்ட மண், இயற்கை உரம் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவை வலுவான வேர் ஆரோக்கியத்தையும், சிறந்த பூக்களையும் ஊக்குவிக்கிறது.
மல்லிகை செடிக்கு முழு சூரிய ஒளி தேவைப்படும். உங்கள் தொட்டியை ஒரு நாளைக்கு குறைந்தது 4 முதல் 6 மணிநேர சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவும். பால்கனி, மொட்டை மாடி அல்லது தெற்கு நோக்கிய ஜன்னல் ஆகியவை இதற்கு சிறந்தவை.
மேலும் படிக்க: சுவை மற்றும் சத்து மிகுந்த சுரைக்காய்; உங்கள் வீட்டு தோட்டத்திலேயே சுலபமாக வளர்க்கலாம்
வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் மண்ணை எப்போதும் சமமான ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். அதிக நீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும். மீண்டும் நீர் ஊற்றுவதற்கு முன், மண்ணின் மேல் பகுதி ஒரு அங்குலமாவது காய்ந்து இருப்பதை உறுதி செய்யவும். குளிர்காலத்தில் நீர் பாய்ச்சும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு பூக்கும் சுழற்சிக்கு பிறகும் அல்லது வசந்த காலத்தின் ஆரம்பத்தில் உங்கள் மல்லிகை பூச்செடியை கத்தரிக்கவும். குறிப்பாக, நுனி இலைகளை கிள்ளி எடுப்பதும் தொட்டிகளில் இது சிறப்பாக பரவ உதவுகிறது.
வளர்ச்சி பருவத்தில் மாதத்திற்கு ஒரு முறை பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த திரவ உரத்தை பயன்படுத்துங்கள். இலைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதிக நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும். இயற்கை உரம் அல்லது வாழைப்பழ தோல் ஊறவைத்த தண்ணீர் ஆகியவை நன்கு வேலை செய்யும்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றினால் உங்கள் வீட்டு தோட்டத்தில் மல்லிகை பூக்கள் பூத்துக் குலுங்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com