herzindagi
solutions for womens health problem

Mudra for Women's Health : விரல்கள் செய்யும் அதிசயம், பெண்களின் 5 பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் யோனி முத்திரை!

உங்கள் கருவுறுதலை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும் பெற யோனி முத்திரையை தினமும் தவறாமல் பயிற்சி செய்யுங்கள்…
Editorial
Updated:- 2023-08-30, 05:00 IST

உங்கள் கருவுறுதல் திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா?

உங்களுக்கு ஆரோக்கியமான மெனோபாஸ் வேண்டுமா?

நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட வேண்டுமா?

இன்றிலிருந்து உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் யோனி முத்திரையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த முத்திரையானது நம் உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபாவை சமநிலைப்படுத்துகிறது.

யோனி முத்திரை பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதை தினமும் பயிற்சி செய்வதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை ஆயுர்வேத மருத்துவரான ஜீத்து ராமச்சந்திரன் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: 10 வயசு குறைஞ்சு இளமையாக தெரிய, இந்த 3 யோகாசனங்களை செய்யுங்கள்!

யோனி முத்திரை என்பது ஒரு சிறப்பு வகை முத்திரையாகும். இது குழந்தை போன்ற மனதை அடைய உதவுகிறது. எப்படி வயிற்றில் வளரும் குழந்தை அமைதியாகவும், வெளி உலகை விட்டு தனிமைப்படுத்தப்படுகிறதோ அதேபோல இந்த முத்திரையை செய்யும் பெண்ணும் வெளி உலகை விட்டு விலகி நல்ல மகிழ்ச்சியான மன நிலையை அனுபவிக்கலாம்.

யோனி முத்திரையை செய்வது எப்படி?

mudra for women

  • இதை செய்வதற்கு முதலில் சம்மணம் போட்டு உட்காரவும், அல்லது வஜ்ராசனம் தோரணையிலும் நேராக நிமிர்ந்து உட்காரலாம்.
  • உங்கள் கைவிரல்களை வளைத்து கருப்பை போன்ற வடிவத்தை உருவாக்கவும்.
  • இப்போது இரு கைகளையும் மேலே உயர்த்தி கட்டை விரல்களை காதுகளுக்கு அருகே வைக்கவும்.
  • ஆள்காட்டி விரலை கண்களுக்கு அருகிலும் நடுவிரலை மூக்கின் மீதும், மோதிர விரலை உதடுகளின் மேல் பகுதியிலும்  வைக்கவும்.
  • இப்பொழுது சுவாசிக்கும் பொழுது உங்களுடைய நடு விரல்களால் மூக்கின் துவாரங்களை மூடி கொள்ளவும்.
  • ஓம் என்று உச்சரிக்கும் பொழுது மூச்சை பிடித்து மெதுவாக வெளியிட வேண்டும்.
  • மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.
  • இந்த பயிற்சியை முதல்முறை செய்யும் பொழுது ஒரு யோகா நிபுணரின் உதவியை பெறலாம்.

பெண்களுக்கு யோனி முத்திரை தரும் நன்மைகள் 

yoni mudra benefits for womens health

கருப்பைக்கு நல்லது 

யோனி முத்திரை கருப்பையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் கருவுறுதலை மேம்படுத்தும். இது ஹார்மோன் சமநிலையின்மையை கட்டுப்படுத்துகிறது மற்றும் பெண்களின் இனப்பெருக்க அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்கும்

யோனி முத்திரையை பயிற்சி செய்வது ஒரு பெண்ணின் உள்ளார்ந்த பெண் ஆற்றலுடன் இணைக்க உதவுகிறது.

மாதவிடாய் நாட்களில் நன்மை தரும்

யோனி முத்திரை கருப்பை மற்றும் மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடையது. இதை கருப்பையில் உள்ள பிராணனை பலப்படுத்துகிறது. இந்த பயிற்சியானது மாதவிடாய் நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மன அழுத்தம் நீங்கும்  

மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் யோனி முத்திரை உதவும். இதை செய்து வர கவனம் மற்றும் மன அமைதி மேம்படும்.

ஆன்மீக ரீதியான நன்மைகளை தரும்

யோனி முத்திரை ஆன்மீக ரீதியாகவும் மிகவும் நல்லது. இதை செய்வதன் மூலம் நீங்கள் அமைதியாக உணருவீர்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்த பயிற்சியை தொடங்குவதற்கு முன் ஒரு யோகா நிபுணரை அணுகி சரியான வழிகாட்டுதல்களுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலை விரட்டி அடிக்கும் விளக்கெண்ணெய், எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com