விளக்கெண்ணெய் மலச்சிக்கல் : தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படும் பிரச்சனைகளில் மலச்சிக்கலும் ஒன்று. இன்றைய வாழ்க்கை சூழலில் பலரும் மலச்சிக்கலால் சிரமப்படுகிறார்கள். மேலும் ஒரு சிலர் இதிலிருந்து விடுபடுவதற்காக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கின்றனர்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்தலாம். மலச்சிக்கலுக்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவதற்கான சரியான முறையை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மூத்த ஆலோசகரான டாக்டர் புஷன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: 2 வாரங்களில் ஃபிட் ஆக வேண்டுமா? இதோ உங்களுக்கான டயட் டிப்ஸ்
நிபுணர்களின் கருத்துப்படி, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு விளக்கெண்ணெய் ஒரு இயற்கை தீர்வாக இருக்கும். விலை உயர்ந்த மருந்துகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையுடைய விளக்கெண்ணெய் மலச்சிக்கலை போக்க சிறந்தது. ஆமணக்கு விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தாவர எண்ணெயில் மலமிளக்கி பண்புகள் உள்ளன. விளக்கெண்ணையை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் குடல் இயக்கம் எளிதாகும் மற்றும் செரிமானமும் மேம்படும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் மலத்தை வெளியேற்ற உதவுகிறது. இதில் நன்மைகள் அதிகம் இருந்தாலும் விளக்கெண்ணையை பயன்படுத்துவதற்கு முன் அதை பயன்படுத்துவதற்கான சரியான முறையையும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மலச்சிக்கலை போக்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வர, குடித்த இரண்டு மணி நேரத்திலேயே நல்ல விளைவுகளை காண முடியும்.
விளக்கெண்ணெய் மலமிளக்கியாக செயல்படும். இருப்பினும் இதை அதிகப்படியாக பயன்படுத்துவது குடல் தசைகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும். மேலும் இந்த செயல்முறை அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஏதேனும் உடல்நல பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த செயல்முறை ஏற்றது அல்ல.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் . இதற்கு பீன்ஸ், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, நிறைய திரவங்களை குடிக்கவும். முடிந்தவரை சுறுசுறுப்பாக இருப்பதையும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: வீட்டு சுவர் போதும், ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்திடலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com