
கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அழகு சார்ந்த பிரச்சனையாக கருதக் கூடாது. கூந்தல் என்பது நம்முடைய ஆரோக்கியத்தை பெரிதும் பிரதிபலிக்கிறது. அதனடிப்படையில், கூந்தல் வளர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அதனால், உங்கள் கூந்தலை எவ்வாறு சரியான முறையில் பராமரிக்கலாம் என காண்போம்.
உச்சந்தலையை மசாஜ் செய்யவும்:
வாரத்திற்கு இரண்டு முறை, உச்சந்தலையை நன்கு மசாஜ் செய்வது நல்லது. இது முடியின் வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சீரான கூந்தல் வளர்ச்சியை உருவாக்கும். இதனை செய்வது ரிலாக்ஸான உணர்வையும் கொடுக்கும்.
முடி, கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. எனவே, உங்கள் உணவில் புரதச்சத்து நிறைந்த முட்டை, பருப்பு வகைகள் மற்றும் கொழுப்பு குறைந்த இறைச்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.

மேலும் படிக்க: Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
இது ஒரு பழமையான மற்றும் இயற்கையான கூந்தல் பராமரிப்பு முறையாகும். அரிசி கழுவிய நீரில் தலைமுடியை அலசுவது, முடிக்கு வலிமையையும், பளபளப்பையும் கொடுப்பதோடு, அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
ஹேர் ஸ்ட்ரைட்னர் அல்லது ப்ளோ ட்ரையர் போன்ற வெப்பம் அதிகமான கருவிகள் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும். இத்தகைய கருவிகள் முடியை சேதப்படுத்துவதோடு, முடியின் இயற்கையான ஈரப்பதத்தையும் நீக்கி விடும். எனவே, இவற்றை பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை இயற்கையான வழியில் அதிகரிக்க உதவும் 5 ஹேர்மாஸ்க்
மிருதுவான தலையணை உறைகளை பயன்படுத்துவது முடியின் உராய்வை குறைக்கும். இதனால், தூங்கும் போது ஏற்படும் முடி உதிர்வு குறையும். மேலும், தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து சுத்தம் செய்வது பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்யுடன் சில துளிகள் புதினா அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யை சேர்த்து உச்சந்தலையில் தடவலாம். இந்த எண்ணெய்கள் முடியின் வேர்க்கால்களை தூண்டி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

போதுமான இடைவெளியில் உங்கள் தலைமுடியை வெட்ட வேண்டும். குறிப்பாக, பிளவுபட்ட நுனிகளை (Split ends) அவ்வப்போது வெட்டுவது, முடி உதிர்வை தடுக்கும். இது முடி வேகமாக வளர உதவும்.
ஹேர் பன், போனிடெயில் போன்ற இறுக்கமான சிகை அலங்காரங்கள் முடியின் வேர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து, முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே, கூந்தலுக்கு தளர்வான ஹேர் ஸ்டைல்களை பயன்படுத்துங்கள்.
மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையைக் கெடுத்து, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். எனவே, மன அழுத்தமில்லாமல் இருக்க தியானம், ஓய்வு, மற்றும் போதுமான தூக்கம் அவசியம். இவற்றை சரியாக பின்பற்ற வேண்டும்.
இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலை நீங்கள் பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com