herzindagi
image

Hair care: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? நீங்கள் செய்யும் இந்த தவறுகளை முற்றிலும் தவிர்க்கவும்

Hair care: அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமென்றால் நாம் செய்யும் சில வகையான தவறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை நமது கூந்தல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதித்து, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Editorial
Updated:- 2025-11-17, 19:19 IST

Hair care: முடி உதிர்தல், பொடுகு போன்ற பல கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாம் தினசரி செய்யும் சில தவறுகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முடி அழகாக, அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், சில அத்தியாவசிய முடி பராமரிப்பு பழக்கங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும். இது தவிர சில தவறுகளையும் தவிர்க்க வேண்டும். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.

 அடிக்கடி தலைக்கு குளித்தல்:

 

பலர் தங்கள் தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டுமன தினமும் ஷாம்பு போட்டு குளிக்கிறார்கள். ஆனால், அடிக்கடி இவ்வாறு செய்வது, தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கிவிடும். இந்த எண்ணெய் பசையே கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. இது நீக்கப்படும் போது, முடி வறண்டு, உதிர்ந்து, வலுவிழந்து போகிறது. எனவே, அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

அதிக சூடான நீரை தலைக்கு பயன்படுத்துதல்:

 

குளிக்கும் போது சுடுதண்ணீரை பயன்படுத்துவது, முடியின் வேர்க்கால்களை பலவீனப்படுத்தும். மேலும், சூடான நீர் கூந்தலை வறண்டு போகச் செய்யும். எனவே, தலைக்கு குளிக்கும் போது எப்போதும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரையே பயன்படுத்தவும். குளிர்ந்த நீர் முடியின் வெளிப்புற பகுதியை மிருதுவாக்கி, கூந்தலை பளபளப்பாக இருக்க உதவும்.

Hair care routine

 

மேலும் படிக்க: Benefits of aloe vera gel: கற்றாழை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்த்தல்:

 

ஷாம்பு போட்டு குளித்த பின் கண்டிஷனர் (Conditioner) பயன்படுத்துவதை தவிர்ப்பது கூந்தல் உதிர்வுக்கு வழிவகுக்கும். அதனால், ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பிறகும் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்தவும். இது முடியை மென்மையாகவும், சிக்கல் இல்லாமலும் வைத்திருக்கும்.

 

ஈரமான முடியை சீவுதல்:

 

முடி ஈரமாக இருக்கும் போது மிகவும் பலவீனமாக இருக்கும். அப்போது பிரஷ் அல்லது மெல்லிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி முடியை சீவினால், முடி எளிதில் உதிர்ந்து விடும். ஈரமான முடியை சீவுவதை கூடுமானவரை தவிர்த்து விட வேண்டும். மேலும், அகலமான பற்கள் கொண்ட சீப்பை (Wide-tooth comb) பயன்படுத்தி மெதுவாக சீவலாம். இது முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை இயற்கையான வழியில் அதிகரிக்க உதவும் 5 ஹேர்மாஸ்க்

 

அதிக வெப்பமூட்டும் சாதனங்களை பயன்படுத்துதல்:

 

ஸ்ட்ரைட்னர், கர்லர் அல்லது அதிக வெப்பமான ஹேர் ட்ரையர் (Blow Dryer) போன்ற வெப்பமூட்டும் சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவது முடியின் வெளிப்புற அடுக்கான கியூட்டிகிள் (Cuticles) பகுதியை நிரந்தரமாக சேதப்படுத்திவிடும். இந்த சாதனங்களின் பயன்பாட்டை பெரும்பாலும் குறைக்க வேண்டும்.குறிப்பாக இவற்றை பயன்படுத்தும் முன், முடியை வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவும் 'ஹீட் ப்ரொடெக்டன்ட்' (Heat Protectant) ஸ்ப்ரேயை தவறாமல் உபயோகிக்கவும்.

Hair care tips

 

தினமும் இறுக்கமான சிகை அலங்காரங்களை மேற்கொள்ளுதல்:

 

தினமும் கூந்தலை இறுக்கமாக கட்டி வைப்பது அல்லது ரப்பர் பேண்டால் இழுத்துக் கட்டுவது போன்றவை கூந்தலின் வேர்க்கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். லூசான பின்னல்கள் அல்லது லேசான கொண்டை போன்ற தளர்வான சிகை அலங்காரங்களுக்கு மாற வேண்டும். இரவில் முடியை தளர்த்தி விடுவது மிகவும் நல்லது.

 

உச்சந்தலையை பராமரிக்க தவறுதல்:

 

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உச்சந்தலை சரியாக இருக்க வேண்டும். பொடுகு அல்லது அதிகப்படியான அழுக்குகள் உச்சந்தலையில் இருந்தால் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, உச்சந்தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஊட்டமளிக்கும் எண்ணெய்கள் அல்லது ஸ்கால்ப் சீரம்களை (Scalp Serums) பயன்படுத்தி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.

 

இது போன்ற பராமரிப்பு முறையை பின்பற்றி, தவறுகளை தவிர்த்தால் உங்களது கூந்தலை ஆரோக்கியமான வகையில் அடர்த்தியாக வளர்க்கலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com