herzindagi
yoga for better digestion expert tip

Yoga for Digestion : செரிமான மண்டலம் சீராக, இந்த யோகாசனங்களை செய்யுங்கள்!

உங்களுடைய செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிபுணர் பரிந்துரை செய்துள்ள பின்வரும் யோகாசனங்களை பயிற்சி செய்யலாம்.
Editorial
Updated:- 2023-07-19, 16:47 IST

நம் உடலில் பல்வேறு வியக்க வைக்கும் செயல்முறைகள் நடைபெறுகின்றன. உடல் செயல்பட ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவின் மூலமாக உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இந்த உணவை ஜீரணம் செய்து அதன் மூலமாக கிடைக்கக்கூடிய சத்துக்களை உடல் பயன்படுத்துகிறது.

இந்நிலையில் ஆரோக்கியமாக இருக்க செரிமான மண்டலத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்து உறிஞ்சுதல், செல்களின் வளர்ச்சி, சீரமைப்பு மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற செரிமான மண்டலம் சீராக செயல்பட வேண்டும். இந்நிலையில் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் யோகாசனங்களை இன்றைய பதிவில் காணலாம். இந்த யோகாசனங்கள் பற்றிய தகவல்களை உலக யோகா அமைப்பின் தலைவரான ஹிமாலயன் சித்த அக்ஷர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்கும் 3 பிரிட்ஜ் பயிற்சிகள்!

 

சுகாசனம் 

sukhasana for digestion

  • இரு கால்களையும் நீட்டி நீராக உட்காரவும். 
  • உங்களுடைய இடது காலை மடக்கி வலது தொடையின் மீது வைக்கவும். 
  • பிறகு வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும். 
  • பின்னர் உள்ளங்கைகளை முழங்காலில் வைக்க வேண்டும். 

புஜங்காசனம்  

bujangasana for digestion

  • முதலில் குப்புற படுத்துக் கொள்ளவும். பின் உங்கள் கால்களை நேராக இணைத்து வைக்கவும். 
  • உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இருபுறமும் வைத்துக் கொள்ளவும். 
  • இப்போது மூச்சை உள்ளிழுத்தவாரே தலை, மார்பு மற்றும் கழுத்து பகுதியை மேலே உயர்த்தி பின்னோக்கி வளைக்க வேண்டும். இவ்வாறு வளைக்கும் பொழுது தொப்புள் தரையைத் தொடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

தண்டாசனம் 

digestion yoga asanas

  • கால்களை நீட்டி நேராக உட்காரவும் 
  • உங்களுடைய இரு பாதங்களையும் அருகில் கொண்டு வந்து, குதிகால்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
  • முதுகை நேராக வைத்து இடுப்பு, தொடை மற்றும் கன்று தசைகளை இறுக்கமாக்குங்கள். 
  • உங்கள் முதுகு தண்டை ஆதரிக்க உள்ளங்கையை இடுப்புக்கு அருகில் தரையில் வைத்துக் கொள்ளலாம். 
  • பின் உங்களுடைய தோள்களையும் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும். 

மலாசனம் 

malasana for digestion

  • முதலில் காலை நன்றாக விரித்து நிற்கவும். 
  • பின் உங்களுடைய முழங்கால்களை வளைத்து பாதி உட்காரும் நிலையில் அமரவும்.(மலம் கழிக்கும் தோரணை) 
  • கைகளை மார்புக்கு அருகில் வைத்து பிராத்தனை செய்வதுபோல் கைகளை வைத்துக் கொள்ளலாம் அல்லது கால்களுக்கு அருகில் தரையில் வைத்துக் கொள்ளலாம். 

உஸ்த்ராசனம்  

ustrasana for better digestion

  • முதலில் யோகா மேட்டில் மண்டியிட்டு உட்காரவும். 
  • கைகளை இடுப்பில் வைத்து முதுகை வளைக்கவும். 
  • பின் கைகளை நேராக்கி உள்ளங்கைகளை பாதங்களின் மீது வைக்கவும். 
  • உங்கள் கழுத்து வசதியான நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 
  • மூச்சை பொறுமையாக வெளியேற்றியவாறு இயல்பு நிலைக்கு திரும்பலாம். 

ஹஸ்த உத்தனாசனம்  

  • கால்களை ஒன்றாக இணைத்து நிற்கவும். 
  • பின் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வைக்கவும். 
  • மூச்சை உள்ளிழுத்த படி தலை, கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியை மெதுவாக வளைக்கவும்.  

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதுமானவரை வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடவும். மேலும் காரம், சர்க்கரை மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள். உங்களுடைய உணவில் நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். மேலும் யோகா செய்து மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல தூக்கத்தையும் பெறுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com