Belly and Hip Fat Exercise : தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்கும் 3 பிரிட்ஜ் பயிற்சிகள்!

வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் படிந்திருக்கக்கூடிய கொழுப்பை குறைக்க பின்வரும் 3 பிரிட்ஜ் பயிற்சிகளை 20 நிமிடங்களுக்கு பயிற்சி செய்யுங்கள்…

bridge pose for hip tummy fat loss

உடலின் கீழ் பகுதியை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள விரும்பினால் இன்றிலிருந்து பிரிஜ் பயிற்சிகளை செய்ய தொடங்குங்கள். இந்த மூன்று பயிற்சிகளையும் 20 நிமிடங்களுக்கு செய்து வந்தால் சில நாட்களிலேயே சிறந்த பலன்களை காண முடியும். பிரிட்ஜ் பயிற்சிகள் வயிற்று மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகின்றன.

பிரிட்ஜ் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

bridge pose benefits for health

  • முழங்கால் மற்றும் முதுகு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு பிரிட்ஜ் பயிற்சி நன்மை தரும். இருப்பினும் மருத்துவரை ஆலோசனை செய்த பின் செய்யத் தொடங்கவும்.
  • பிரிட்ஜ் பயிற்சி கீழ் முதுகை வலுப்படுத்துகிறது இதை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பின் இயக்கமும் மேம்படும்.
  • பிரிட்ஜ் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலின் தோரணை மேம்படுத்தும். ஆகையால் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு பிரிட்ஜ் பயிற்சி அறிவுறுத்தப்படுகிறது.
  • இந்த பயிற்சியை செய்வதால் உடலின் அனைத்து முக்கிய தசைகளும் செயல்படுத்தப்படுகின்றன.

இப்போது தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைப்பதற்கான மூன்று பிரிட்ஜ் பயிற்சிகளை விரிவாக பார்க்கலாம்.

ஸ்கை பிரிட்ஜ் பயிற்சி

sky bridge pose

  • இந்த பயிற்சியை செய்வதற்கு பாய் அல்லது யோகா மேட்டை தரையில் விரித்து படுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் உங்கள் கைகளை உடலின் இருபுறமும் விரித்து, உள்ளங்கை தரையில் படும்படி வைக்க வேண்டும்.
  • உங்களுக்கு முன் ஒரு நாற்காலியை வைத்து அதன் மீது கால்களை வைக்கவும்.
  • இப்போது இடுப்பை உயர்த்தி, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
  • இந்தத் தோரணையில் சில நிமிடங்கள் இருக்கவும்.
  • இந்த பயிற்சியை செய்வதன் மூலம் இடுப்பு மற்றும் தொப்பை குறைவதுடன் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் நீக்கலாம்.

ஒற்றை கால் பிரிட்ஜ் பயிற்சி

one leg lift bridge pose

  • உங்கள் கீழ் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள இந்த பயிற்சி சிறந்தது. இது இடுப்பு தசை மற்றும் கால்களுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது.
  • இந்த பயிற்சி செய்வதற்கு தரையில் நேராக படுத்துக் கொள்ளவும்.
  • முழங்காலை வளைத்து உள்ளங்கால்களை தரையில் நெருக்கமாக வைக்க வேண்டும்.
  • பின்னர் உங்களுடைய ஒரு முழங்காலை மட்டும் உயர்த்தவும். மற்றொரு காலை தரையில் நேராக வைக்கவும்.
  • சுவாசிப்பதில் கவனம் செலுத்தி 4-5 வினாடிகளுக்கு இந்த தோரணையில் இருக்கவும்.
  • நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த உடற்பயிற்சி அதிக நன்மைகளை தரும்.

கால் தூக்கும் பிரிட்ஜ் பயிற்சி

  • இது வயிற்று தசைகளை செயல்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்ய முதலில் பாயில் நேராக படுத்துக் கொள்ளவும்.
  • இரு கைகளையும் தரையில் வைத்து கால்களை மெதுவாக மேலே உயர்த்தவும்.
  • இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 4-5 முறை செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்: குறைவாக சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் குறையவில்லையா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP