herzindagi
lose weight without exercise diet tips

No Exercise Weight loss : உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க!

ஜிம்மிற்கு செல்லாமல் மாதம்தோறும் இரண்டு கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்…
Editorial
Updated:- 2023-07-18, 18:58 IST

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மட்டும் செய்வதுடன் நல்ல ஆரோக்கியமான சீரான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க நிறைய காலமும் முயற்சியும் தேவைப்படுகிறது. இதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்த மிக குறைவாக சாப்பிடுவதும் தவறானது. கலோரி பற்றாக்குறையினால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் இது பல தீவிர உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

மேலும் குறைந்த கலோரி உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது, உடலின் ஆற்றலுக்காக தசைகளும் திசுக்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வளர்ச்சிதை மாற்றம் குறைந்துவிடும். இது ஆரோக்கியமானது கிடையாது. எனவே கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உடல் எடையை குறைக்க பின்வரும் 4 உணவுகளை சாப்பிடலாம். இது குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான மன்பிரித் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

இந்த பதிவும் உதவலாம்: 15 நாட்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் 5 எளிய குறிப்புகள்!

 

வெந்தயம்

lose weight with fenugreek seeds

இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்

செய்முறை 

  • வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில், ஊறவைத்த வெந்தய நீரை சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • இதனை வடிகட்டிய பின் குடிக்கலாம்.

இஞ்சி மற்றும் செம்பருத்தி டீ

செம்பருத்தியில் உள்ள பண்புகள் கொழுப்புகளை வளர்ச்சிதை மாற்றம் செய்ய உதவுகின்றன. இதில் சேர்க்கப்படும் இஞ்சி செரிமானம் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும்.

தேவையான பொருட்கள்

  • செம்பருத்தி இதழ்கள் - சிறிதளவு 
  • இஞ்சி - அரை அங்குலம் 
  • தேன் - சுவைக்கு ஏற்ப

செய்முறை

  • காம்பை நீக்கிவிட்டு செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • தண்ணீருடன் இஞ்சி மற்றும் செம்பருத்தி இதழ்கள் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • பின் மூடி போட்டு  15-20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். 

ஆப்பிள் சிடர் வினிகர் 

lose weight with apple cider vinegar

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் சிடர் வினிகர் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப் 

செய்முறை

  • தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து தினமும் காலையில் குடிக்கவும்

ஆப்பிள் மற்றும் பூசணி விதைகள்

  • இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து பசி ஆர்வம் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • ஒரு ஆப்பிளுடன் ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளை சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: குறைவாக சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் குறையவில்லையா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com