ஆரோக்கியமாக இருக்க சமநிலையான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். இதற்கு உடல் செயல்பாடு மற்றும் சரியான உணவு முறைகளை எடுக்கத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். உடல் செயல்பாடுகளுக்கு உடற்பயிற்சி தேவையில்லை. நடைப்பயிற்சியும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக, உணவுக்குப் பின் நடப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. இதிலும் இரவு உணவுக்குப் பின் நடப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரவு உணவு உண்ட உடனேயே உறங்கச் சென்றாலோ, அல்லது நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படுவதோடு , பல தீமைகளையும் உண்டாக்கும். மறுபுறம், நீங்கள் இரவு உணவிற்குப் பிறகு நடந்தால், பல நன்மைகளைப் பெறலாம். , பெங்களூரு கிளவுட்நைன் குழும மருத்துவமனைகளின் ஊட்டச்சத்து நிபுணர், ஃபலாக் ஹனீப் இது பற்றிய தகவல்களைத் தருகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதில் 30 வயதுக்கான தோற்றத்தை பெற இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்
இரவு உணவை ஜீரணிக்க உதவும்
நாம் உணவு உண்ணும் போது, வயிற்றில் ஜீரண சாறுகள் சுரந்து, உணவை ஜீரணிக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு சுறுசுறுப்பாக இருக்கும்போது, நடந்தால், அது வயிற்றில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உணவு செரிமான மண்டலத்திற்கு எளிதாக நகர்ந்து விரைவாக செரிமானமாகிறது. மேலும், உணவு உண்டவுடன் வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் இருக்காது. இது சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிற்று உப்புசத்தையும் நீக்குகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால்தான் நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுக்குப் பிறகு நடப்பது மிகவும் முக்கியமாகிறது. டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. எனவே சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, இரவு உணவிற்குப் பிறகு சுமார் 30 நிமிடங்கள் நடக்கவும்.
எடை இழப்புக்கு உதவும்
இரவு உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்தால், உடல் எடையைக் குறைக்கலாம். இருப்பினும், இதனுடன் கலோரி எண்ணிக்கை மற்றும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது மட்டுமே போதுமானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உணவுக்குப் பிறகு வழக்கமான நடைப்பயிற்சி செல்வதும் எடை இழப்புக்கு அவசியம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்துக்கு உதவும்
உணவுக்குப் பின் நடப்பதும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், இரவு உணவிற்குப் பிறகு வேகமாக நடப்பது அசௌகரியம் அல்லது வலியை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், சாப்பிடுவதற்கும் நடைப்பயிற்சி செய்வதற்கும் இடையே சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.
நடைபயிற்சி தீங்கு விளைவிக்கும்
இருப்பினும், இரவு உணவிற்குப் பிறகு நடக்கும்போது, உங்கள் திறனுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களின் சக்திக்கு மீறி நடந்தால், நரம்புகள் நீட்சி, தசைப்பிடிப்பு, மிகவும் சோர்வாக இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், சாப்பிட்ட உடனேயே நடக்க முடியாமல் பலர் சிரமப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், சாப்பிட்ட பிறகு, சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும். இன்னும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும், சாப்பிட்டவுடன் மிக வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும்
இந்த பதிவும் உதவலாம்: மது அருந்தும்போது சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation